பெட்டாலிங் ஜெயா தாமான் அமான் பொதுப் பூங்கா தூய்மை மேலாண்மை, 'குப்பைத் தொட்டி இல்லாத பகுதி' எனும் முன்னோடித் திட்டம் அறிமுகம் .

15 பிப்ரவரி 2026, 6:32 AM
பெட்டாலிங் ஜெயா  தாமான் அமான் பொதுப் பூங்கா தூய்மை மேலாண்மை, 'குப்பைத் தொட்டி இல்லாத பகுதி' எனும் முன்னோடித் திட்டம் அறிமுகம் .

ஷா ஆலாம், பிப். 15: பெட்டாலிங் ஜெயா மாநகரசபை (MBPJ), பிரிவு 22, தாமான் அமானில் பொதுப் பூங்கா தூய்மை மேலாண்மையை மிகவும் நீடித்த மற்றும் பயனுள்ள முறையில் வலுப்படுத்தும் ஒரு படியாக, 'குப்பைத் தொட்டி இல்லாத பகுதி' எனும் முன்னோடித் திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது.

'உள்ளே கொண்டு வாருங்கள், வெளியே எடுத்துச் செல்லுங்கள்' (Carry In, Carry Out) என்ற கருத்தை இந்த முயற்சி அறிமுகப் படுத்துகிறது. இது, பூங்காவிற்குள் கொண்டு வரும் கழிவுகளை வருகையாளர்கள் மீண்டும் வீட்டிற்கு எடுத்துச் செல்ல ஊக்குவிக்கிறது.

பொதுக் குப்பைத் தொட்டிகளைச் சார்ந்திருக்காமல், பூங்கா வளாகம் எப்போதும் சுத்தமாகவும், ஒழுங்காகவும், பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதி செய்வதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும் என்று எம்பிபிஜே தெரிவித்துள்ளது.

இந்த அணுகுமுறை தூய்மையின் அளவை உயர்த்துவதோடு மட்டுமல்லாமல், பொது வசதிகளைப் பாதுகாப்பதிலும், சுற்றுச்சூழலின் நிலைத்தன்மையைப் பேணுவதிலும் சமூகத்தினரிடையே கூட்டுப் பொறுப்புணர்வை வளர்க்கிறது.

“இந்தச் செயல்பாட்டின் மூலம், பார்வையாளர்கள் தாங்கள் கொண்டு வரும் ஒவ்வொரு கழிவையும் மீண்டும் வெளியே எடுத்துச் செல்லும் 'உள்ளே கொண்டு வாருங்கள், வெளியே எடுத்துச் செல்லுங்கள்' என்ற கருத்தைப் பின்பற்றுமாறு ஊக்குவிக்கப் படுகிறார்கள்,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த முன்னோட்டத் திட்டத்தின் தொடர்ச்சியான மேம்பாட்டிற்காகப் பொதுமக்களிடமிருந்து வரும் கருத்துக்களையும் எம்பிபிஜே வரவேற்கிறது.

"பொதுமக்கள் அந்த இடத்தில் வழங்கப்பட்டுள்ள QR குறியீட்டை வருடுவதன் (scan) மூலம் அல்லது மேலதிக விவரங்களுக்கு 03-7804 8907 என்ற எண்ணில் எம்பிபிஜே நில வடிவமைப்புத் துறையை (Jabatan Landskap MBPJ) தொடர்பு கொள்ளலாம்," என்று அது கூறியது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.