உலகத் தாய்மொழி நாள் 2026: பொதுமக்களுக்கு அழைப்பு

12 பிப்ரவரி 2026, 9:38 AM
உலகத் தாய்மொழி நாள் 2026: பொதுமக்களுக்கு அழைப்பு

கோலாலம்பூர், பிப். 12 – உலகத் தாய்மொழி நாளின் அதிகாரப்பூர்வத் தொடக்க விழா எதிர்வரும் 28 பிப்ரவரி 2026 (சனிக்கிழமை) அன்று கோலாலம்பூர் & சிலாங்கூர் சீனப் பல்நோக்கு மண்டபம் (KLSCAH) நடைபெறவுள்ளதாக இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அந்நிகழ்வின் பொறுப்பாளர் தெரிவித்தார். மேலும், இதனைத் தொடர்ந்து கண்காட்சி மற்றும் பரிசளிப்பு விழா 9 மே 2026 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இவ்வாண்டு உலகத் தாய்மொழி தினத்தை 15-ஆவது ஆண்டாகக் கொண்டாடுகிறார்கள். 2026-ஆம் ஆண்டிற்கான உலகத் தாய்மொழி நாளின் கருப்பொருள் “தாய்மொழி: நம் அனைவரின் பொது மரபும் அடையாளமும்” என்பதாகும்.

உலகத் தாய்மொழி நாள் 2011-ஆம் ஆண்டு மலேசியத் தமிழ் அறவாரியம் (Tamil Foundation Malaysia) மற்றும் LLG எனப்படும் லிம் லியன் கியோக் கலாச்சார மேம்பாட்டு மையத்தால் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் பெட்டாலிங் ஜெயா நூலகத்தில் ஒரு முன்னோடி முயற்சியாக அறிமுக நிகழ்ச்சி மற்றும் கூட்டு அறிக்கையுடன் வெளியிடப்பட்டது. பின்னர், 2012-ஆம் ஆண்டில் பெரிய அளவில் பல இன சங்கங்களுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டது. அதன் பின்னர், பல்வேறு சமூக அமைப்புகள் இத்திட்டத்தில் இணையத் தொடங்கின.

இவ்வாண்டு, LLG லிம் லியன் கியோக் கலாச்சார மேம்பாட்டு மையத்தின் தலைமைவில் மலேசிய இக்ராம் அமைப்பு (IKRAM), மலேசியத் தமிழ் அறவாரியம் (TFM), மலேசியச் சீனப் பள்ளிகள் மேலாண்மை வாரியக் கூட்டமைப்பு (Dong Zong), மலேசியன் நேட்டிவ் நெட்வொர்க் (JAOS), மலேசியச் சீனப் பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (Jiao Zong), கோலாலம்பூர் & சிலாங்கூர் சீனப் பல்நோக்கு மண்டபம் (KLSCAH), மெர்டேக்கா பல்கலைக்கழகம், தைவான் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கங்களின் கூட்டமைப்பு (FAATUM), கடாசான்டுசுன் மொழி அறவாரியம் (KLF) ஆகிய அமைப்புகள் இணைந்து இவ்விழாவை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கண்காட்சி மற்றும் பரிசளிப்பு விழா 9 மே 2026 அன்று நடைபெறவிருப்பதாகவும், தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை எழுதும் போட்டியும் ஓவியப் போட்டியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. மாணவர்கள் இப்போட்டிகளில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

போட்டி விவரம்:

படிநிலை 1 (ஆண்டு 1 – 3) – ஓவியப் போட்டிதலைப்பு: தாய்மொழி எனது பெருமைபடிநிலை 2 (ஆண்டு 4 – 6) – கட்டுரை எழுதும் போட்டிதலைப்பு: தாய்மொழி, என் முதல் மொழி

படிநிலை 1 (ஆண்டு 1 – 3) – ஓவியப் போட்டிதலைப்பு: தாய்மொழி எனது பெருமை

படிநிலை 1 (ஆண்டு 1 – 3) – ஓவியப் போட்டிதலைப்பு: தாய்மொழி எனது பெருமை

படிநிலை 2 (ஆண்டு 4 – 6) – கட்டுரை எழுதும் போட்டிதலைப்பு: தாய்மொழி, என் முதல் மொழி

படிநிலை 2 (ஆண்டு 4 – 6) – கட்டுரை எழுதும் போட்டிதலைப்பு: தாய்மொழி, என் முதல் மொழி

இப்போட்டிகளில் முதல் 10 நிலையில் வெற்றி பெறும் மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும். பங்கு பெறும் அனைத்து மாணவர்களுக்கும் மின் சான்றிதழ் வழங்கப்படும்.

தாய்மொழி என்பது நாகரிகம், பண்பு, நல்லொழுக்கத்தை வளர்க்கும் வலுவான அடிப்படையாகும். அனைவரும் ஒன்றிணைந்து உலகத் தாய்மொழி நாளை சிறப்பாகக் கொண்டாடி, தாய்மொழியின் முக்கியத்துவத்தை மக்களிடம் கொண்டு செல்ல அழைக்கப்படுகிறார்கள்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.