தொடக்கப் பள்ளிகளில் வரலாறு பாடம் ஐந்தாம் மற்றும் ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டுமே போதிக்கப்படும்

12 பிப்ரவரி 2026, 1:43 AM
தொடக்கப் பள்ளிகளில் வரலாறு பாடம் ஐந்தாம் மற்றும் ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டுமே போதிக்கப்படும்

புத்ராஜெயா, பிப் 12: தொடக்கப் பள்ளிகளில் வரலாறு பாடம் ஐந்தாம் மற்றும் ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டுமே போதிக்கப்படும் என்று கல்வி அமைச்சகம் (KPM) வலியுறுத்தியுள்ளது.

2027ஆம் ஆண்டிற்கான பாடத்திட்டத்தில் வரலாறு பாடம் குறித்து வெளியான ஊடகச் செய்திகளைத் தொடர்ந்து இந்த விளக்கம் அளிக்கப்பட்டதாகக் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மக்களவையில் நடைபெற்ற வாய்மொழி கேள்வி–பதில் அமர்வில், அடுத்த ஆண்டு தொடங்கவுள்ள புதிய பாடத்திட்டத்தின் அமலாக்கம் குறித்து கல்வித் துணை அமைச்சர் வோங் கா வோ விளக்கமளித்தார். இந்த புதிய பாடத்திட்டம் முதலாம் ஆண்டு மற்றும் முதலாம் படிவ மாணவர்களை உள்ளடக்கியதாகும்.

“வரலாறு பாடம் தொடக்கப் பள்ளிகளில் ஐந்தாம் மற்றும் ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கு போதிக்கப்படும்.

மேலும், இடைநிலைப் பள்ளியில் முதலாம் படிவத்திலிருந்து வரலாறு பாடம் மாணவர்களுக்குப் போதிக்கப்படும் ,” என்று தெரிவிக்கப்பட்டது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.