மாநில அளவிலான சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பல்வேறு இனங்களைச் சேர்ந்த 10,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

8 பிப்ரவரி 2026, 3:07 AM
மாநில அளவிலான சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பல்வேறு இனங்களைச் சேர்ந்த 10,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

சுபாங் ஜெயா, பிப் 8: இன்வெஸ்ட் சிலாங்கூர் மற்றும் சுபாங் ஜெயா மாநகராட்சி (எம்பிஎஸ்ஜே) ஆகிவற்றுடன் உடன் இணைந்து சிலாங்கூர் அரசு ஏற்பாடு செய்திருந்த மாநில அளவிலான சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பல்வேறு இனங்களைச் சேர்ந்த 10,000க்கும் மேற்பட்டோர் வருகை அளித்தனர்.

பூச்சோங்கில் உள்ள வாவாசான் பொழுதுபோக்கு பூங்காவில் நடைபெற்ற இந்நிகழ்வில், டத்தோ மந்திரி புசார், டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி மற்றும் அவரது மனைவி டத்தின் ஸ்ரீ மஸ்டியானா முகமட் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மேலும், இதில் ஆட்சிக்குழு உறுப்பினர்கள், மாநில சட்டமன்ற உறுப்பினர்கள், பெட்டாலிங் மாவட்ட அதிகாரி, ஹுசுனுல் கைடில் முகமட், ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் மாநில மற்றும் மத்திய துறைகளின் தலைவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த நிகழ்விற்கு இரவு சுமார் 8.45 மணியளவில் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி மற்றும் அவரது மனைவி வருகை தந்தனர். அதை தொடர்ந்து, சிங்க நடன நிகழ்ச்சி மற்றும் நல்வாழ்வு மற்றும் செழிப்பின் அடையாளமாக அரிசி கலக்கும் நிகழ்வும் நடைபெற்றது.

இதற்கிடையில், தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு அரசு சாரா நிறுவனத்திற்கும் (NGO) சுபாங் ஜெயா மாநகராட்சி சார்பில் RM1,000 நன்கொடையையும் அமிருடின் வழங்கினார்.

வருகையாளர்களுக்கு சாத்தே, முர்தபாக், சியோங் ஃபன், ஃப்ரைட் ரைஸ் மற்றும் பானங்கள் உள்ளிட்ட பல்வேறு உணவு வகைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் கலாச்சார நடனங்கள், இசை நிகழ்ச்சிகள், சிங்க நடனங்கள், வாயாங் குலிட் மற்றும் வாணவேடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.