ரக்கான் மூடா திட்டம் தொடர்ந்து வலுப்படுத்தப்படும்

3 பிப்ரவரி 2026, 4:15 AM
ரக்கான் மூடா திட்டம் தொடர்ந்து வலுப்படுத்தப்படும்

சுங்கை பட்டாணி, பிப் 3: எதிர்காலத்தில் நாட்டை வழிநடத்தும் திறன் கொண்ட தரமான இளைஞர்களை உருவாக்கும் முயற்சியாக ரக்கான் மூடா திட்டம் தொடர்ந்து வலுப்படுத்தப்படும்.

கிராமப்புறங்கள் மற்றும் பள்ளி முதல் பல்கலைக்கழக நிலைகள் வரை இந்த திட்டம் விரிவாக செயல்படுத்தப்பட வேண்டும் என்று இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் டாக்டர் முகமட் தௌபிக் ஜோஹாரி கூறினார்.

“தேசியத் தலைமையை ஏற்கும் திறன் கொண்ட தரமான இளைஞர்களை உருவாக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.``

“அதனால்தான் ரக்கான் மூடா திட்டத்தைத் தொடர்ந்து வலுப்படுத்த நாங்கள் விரும்புகிறோம். கடந்த ஆண்டு, இந்தத் திட்டத்திற்காக RM20 மில்லியன் ஒதுக்கப்பட்டிருந்தது நிலையில் இவ்வாண்டு RM40 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது,” என்று முகமட் தௌபிக் கூறினார்.

இத்திட்டத்தை மேலும் விரிவான நிலையில் வலுப்படுத்துவதற்காக திட்டமிடவும், ஒழுங்குபடுத்தவும், தொடர்புடைய தரப்புகளுடன் கலந்தாலோசிக்கவும் அமைச்சகம் முடிவெடுத்துள்ளது என்றார் அவர்.

ரக்கான் மூடா திட்டத்தில் 10 பிரிவுகள் உள்ளன. அவை ரக்கான் டெமோக்ராசி, ரக்கான் லிதார், ரக்கான் அக்டிஃப், ரக்கான் பூமி, ரக்கான் டிஜிட்டல், ரக்கான் எக்ஸ்பிரஸி, ரக்கான் மியூசிக், ரக்கான் மாஹர், ரக்கான் நியாகா மற்றும் ரக்கான் பிரிஹாத்தின் ஆகியவையாகும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.