ஈப்போ, அக்டோபர் 12: இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சின் கீழ் Rakan Muda திட்டத்திற்காக பெறப்பட்ட நிதி ஒதுக்கீடு இளைஞர்களிடையே வேலையின்மை பிரச்சனையைக் குறைக்கப் பயன்படுத்தப்படும்.
ஆங்கில மொழியில் தேர்ச்சி மற்றும் புலமை இல்லாதது அடையாளம் காணப்பட்ட காரணங்களாகும் என்று அதன் அமைச்சர் ஹன்னா யோ தெரிவித்தார்.
Rakan Muda-வின் கீழ் உள்ள 10 பயிற்சி திட்டங்களில் ஒன்றான Rakan Mahir திறன் பயிற்சியின் வழி இம்முயற்சி மேற்கொள்ளப்படும் ஹன்னா யோ கூறினார்.
''பலருக்கு ஆங்கிலம் தெரியாது அல்லது சரளமாகப் பேசத் தெரியாது என்பதே இளைஞர்களிடையே வேலையின்மைக்கு நாங்கள் கண்டறிந்த காரணங்களில் ஒன்று. எனவே, எங்கள் ராக்கான் மஹிர் பயிற்சி வழி எங்களிடம் உள்ள கூடுதல் ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி, இளைஞர்களை மேம்படுத்தி வேலையின்மையைக் குறைக்க முடியும்'', என்று அவர் கூறினார்.
சனிக்கிழமை, பேராக் ஈப்போவில் நடைபெற்ற தேசிய அளவிலான 2025-ஆம் ஆண்டு தேசிய விளையாட்டு தினத்தின் தொடக்க விழாவுக்குப் பின்னர், ஹன்னா செய்தியாளர்களிடம் பேசினார்.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்த 2026-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் வழி நாட்டின் விளையாட்டு துறை மேம்பாட்டிற்காக 58 கோடி ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதையும் அவர் வரவேற்றார்.
-- பெர்னாமா