பத்துமலை  மின்படிக்கட்டு பிரச்சனை ஜூலை மாதத்துக்குள் தீர்க்கப்படும்

31 ஜனவரி 2026, 4:25 AM
பத்துமலை  மின்படிக்கட்டு பிரச்சனை ஜூலை மாதத்துக்குள் தீர்க்கப்படும்

கோலாலம்பூர், ஜன 30 — பத்து மலையில் (எஸ்கலேட்டர்) மின்படிக்கட்டு கட்டுமானம் தொடர்பான நீண்ட கால பிரச்சனை ஜூலை மாதத்துக்குள் தீர்க்கப்பட்டு திட்டம் முன்னேறும் என்று ஸ்ரீ மஹா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத் தலைவர் டான் ஸ்ரீ நடராஜா ரத்னம் தெரிவித்தார்.

மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரியிடம் விளக்கப்பட்டுள்ளது, மீதமுள்ள தடைகள் தொழில்நுட்ப ரீதியானவை மட்டுமே என்றும் சில மாதங்களில் தீர்க்கப்படும் என்றும்  நடராஜா  உறுதியளித்ததார்.

இன்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பத்து மலையைப் பார்வையிட்டபோது இந்த விவகாரம் விவாதிக்கப் பட்டது. அன்வார் நாடராஜாவையும் அமிருடினையும் அழைத்து நேரடியாகக் கூட்டம் நடத்தினார்.“பிரதமர் என்னையும் மந்திரி புசாரையும் அழைத்து இந்த விவகாரம் தீர்க்கப்பட வேண்டும் என்றார். இது சமூக விவகாரம், நீட்டிக்கக் கூடாது என்றார்” என்று அவர் பிரதமர் அன்வாருடன் தைப்பூச ஏற்பாடுகளை பார்வையிட்ட போது ஊடகங்களிடம் தெரிவித்தார்.

மின்படிக்கட்டு  (எஸ்கலேட்டர்) முன்மொழிவு, தொடர்புடைய வணிக வளர்ச்சிக்கான தற்காலிக அனுமதி விண்ணப்பத்தை மாநில அரசு நிராகரித்ததால் தடைபட்டது. இந்த முடிவு கணிசமான தாமதத்தை ஏற்படுத்தியது மற்றும் பங்குதாரர்களிடையே வேறுபட்டகருத்துகளுக்கு வழிவகுத்தது.

எனினும், கோயில் மாநில அரசுடன் மோதலில் இல்லை என்று நடராஜா வலியுறுத்தினார். இது தொழில்நுட்ப தாமதம் மட்டுமே, சர்ச்சை மோதல் அல்ல. “இது தொழில்நுட்ப விவகாரம் மட்டுமே, ஆனால் சிலர் அதை பெரிதாக்கினர்” என்று அவர் கூறினார்.

பிரச்சினை தீர்க்கப் பட்டுள்ளதால் பொதுமக்கள் வீண்  உகங்கங்களை பரப்ப வேண்டாம் என்று வலியுறுத்தினார். கோவில் நீதிமன்ற உத்தரவின் கீழ் செயல்படுவதால் சிக்கலான நிர்வாகத் தேவைகள் உள்ளன என்று தலைவர் விளக்கினார்.

இந்த சட்டக் கட்டுப்பாட்டு மீதான விளக்கத்தை பிரதமர் ஏற்றுக்கொண்டார், அமிருடின் மற்றும் நடராஜா இருவரும் விவகாரத்தை விரைவில் தீர்க்க ஒப்புக்கொண்டனர். நாடராஜா, இந்திய சமூகம் மற்றும் பத்து மலை கோயிலுக்கு பிரதமர் அன்வாரின் தொடர்ச்சியான ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார்.

பிரதமர் சமீபத்தில் வளர்ச்சிக்கு கூடுதலாக RM 1 மில்லியன் ஒதுக்கீடு அங்கீகரித்ததாகக் குறிப்பிட்டார்.இந்த வளர்ச்சியில் அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். கோயில் பிரதமரின் உத்தரவுகளைப் பின்பற்றும் என்று  கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.