2027ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஈ.சி.ஆர்.எல் ரயில் சேவை தொடங்க போக்குவரத்து அமைச்சு இலக்கு- அந்தோணி லோக் தகவல்

28 ஜனவரி 2026, 8:09 AM
2027ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஈ.சி.ஆர்.எல் ரயில் சேவை தொடங்க போக்குவரத்து அமைச்சு இலக்கு- அந்தோணி லோக் தகவல்

கோலாலம்பூர், ஜன 28- ஈ சி ஆர் எல் ரயில் சேவை திட்டமிட்டபடி, ஜனவரி 2027ஆம் ஆண்டு செயல்படத் தொடங்கும். இதனைப் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் உறுதிப்படுத்தினார்.

ரயில் தண்டவாளங்கள் அமைப்பதை விட, அதன் இயக்க முறைமை சீராக இருப்பதே மிகவும் முக்கியம் என்று அவர் கூறினார்.

தற்போது முறைமை சோதனைகள் இன்னும் தொடங்கப்படவில்லை. கே எல் ஐ ஏ ஏரோட்ரெய்ன் மற்றும் எல் ஆர் டி மூன்று ஆகியவற்றில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் மூலம் பாடம் கற்றிருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

பாதுகாப்பையும் நம்பகத்தன்மையையும் உறுதி செய்த பின்னரே, முழுமையான ரயில் சேவை தொடங்கப்படும். கடந்த அக்டோபர் இரண்டாயிரத்து இருபத்து ஐந்து நிலவரப்படி, ஈ சி ஆர் எல் திட்டம் எண்பத்தொன்பது விழுக்காடு நிறைவடைந்துள்ளது.

இத்திட்டம் கிளாந்தான், திரங்கானு, பகாங் மற்றும் சிலாங்கூர் மாநிலங்களை இணைக்கிறது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.