ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னீஸ் போட்டி; இளம் வீரர் மேஸ்ட்ரெல்லியை வீழ்த்தி ஜோகோவிச் மூன்றாவது சுற்றுக்கு முன்னேற்றம்

22 ஜனவரி 2026, 9:23 AM
ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னீஸ் போட்டி; இளம் வீரர் மேஸ்ட்ரெல்லியை வீழ்த்தி ஜோகோவிச் மூன்றாவது சுற்றுக்கு முன்னேற்றம்

மெல்போர்ன், ஜன 22 – ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில், உலகின் முன்னாள் முதல் நிலை வீரரான நோவக் ஜோகோவிச், இத்தாலியின் இளம் வீரர் பிரான்செஸ்கோ மேஸ்ட்ரெல்லியை எளிதில் தோற்கடித்து மூன்றாவது சுற்றுக்குள் நுழைந்தார்.

தனது 25-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லும் இலக்குடன் களமிறங்கியுள்ள இந்த செர்பிய நட்சத்திரம், தரவரிசையில் 141-ஆவது இடத்தில் உள்ள மேஸ்ட்ரெல்லியை 6-3, 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார்.

மெல்போர்னில் உள்ள ராட் லேவர் அரங்கில் (Rod Laver Arena) நடைபெற்ற இப்போட்டியில், 38 வயதான ஜோகோவிச் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தினார்.

முதல் செட்டை வெறும் 47 நிமிடங்களில் கைப்பற்றிய அவர், அடுத்தடுத்த செட்களிலும் மேஸ்ட்ரெல்லியின் சர்வீஸ்களை முறியடித்து வெற்றியை உறுதி செய்தார்.

மேஸ்ட்ரெல்லிக்கு இதுவே முதல் கிராண்ட்ஸ்லாம் அறிமுகப் போட்டியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது நான்காம் நிலை வீரராகப் போட்டியிடும் ஜோகோவிச், அடுத்ததாக நடைபெறவுள்ள மூன்றாவது சுற்று ஆட்டத்தில் நெதர்லாந்தின் போடிக் வான் டி சான்ட்ஷுல்ப்பை (Botic van de Zandschulp) எதிர்கொள்ளவுள்ளார்.

மெல்போர்ன் பூங்காவில் தனது 11-ஆவது சாம்பியன் பட்டத்தை நோக்கிய ஜோகோவிச்சின் பயணம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.