ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னீஸ் போட்டி; பாய் ஜூவோக்சுவானை வீழ்த்தி சபலெங்கா மூன்றாவது சுற்றுக்கு முன்னேற்றம்

21 ஜனவரி 2026, 9:10 AM
ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னீஸ் போட்டி; பாய் ஜூவோக்சுவானை வீழ்த்தி சபலெங்கா மூன்றாவது சுற்றுக்கு முன்னேற்றம்

மெல்பர்ன், ஜன 21: ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், உலகின் முதல் நிலை வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலெங்கா (Aryna Sabalenka), சீனாவின் பாய் ஜூவோக்சுவானை (Bai Zhuoxuan) வீழ்த்தி மூன்றாவது சுற்றுக்குத் தகுதிப் பெற்றுள்ளார்.

நேற்று நடைபெற்ற இரண்டாவது சுற்று ஆட்டத்தில் அதிரடி காட்டிய சபலெங்கா 6-3, 6-1 என்ற நேர் செட்களில் அபார வெற்றி பெற்றார்.ரோட் லாவர் அரங்கில் (Rod Laver Arena) நடைபெற்ற இந்த ஆட்டத்தின் தொடக்கத்தில் சபலெங்கா மிகுந்த ஆதிக்கம் செலுத்தினார். முதல் ஐந்து ஆட்டங்களையும் (Games) தொடர்ந்து வென்று 5-0 என முன்னிலை பெற்ற அவர், மிக எளிதாக செட்டை முடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

இருப்பினும், உலகத் தரவரிசையில் 702-வது இடத்தில் உள்ள சீனாவின் 23 வயது இளம் வீராங்கனை பாய் ஜூவோக்சுவான், சபலெங்காவின் சர்வீஸை முறியடித்து கடும் சவாலை அளித்தார். இதனால் முதல் செட் 39 நிமிடங்கள் நீடித்தது. இறுதியில் தனது ஏழாவது 'செட் பாயிண்டில்' சபலெங்கா முதல் செட்டைக் கைப்பற்றினார்.

இரண்டாவது செட்டில் சபலெங்கா தனது முழு பலத்தையும் வெளிப்படுத்தினார். வெறும் 72 நிமிடங்களில் ஒட்டுமொத்தப் போட்டியையும் முடிவுக்குக் கொண்டு வந்த அவர், அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.