ஷா ஆலம், ஜன 15: இந்த ஆண்டுக்கான குடியிருப்பாளர் சங்கங்கள், பள்ளிகள், இஸ்லாம் மற்றும் இஸ்லாம் அல்லாத வழிபாட்டு தளங்களுக்கான நிதி உதவிக்கான விண்ணப்பங்கள் தற்போது திறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியான அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிதி உதவிக்கான விண்ணப்ப காலம் 2026 ஜனவரி 13 முதல் ஜனவரி 30 வரை ஆகும். கொடுக்கப்பட்டுள்ள கால அவகாசத்திற்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும், காலாவதியான விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்கள் மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாக (ஹார்ட்காப்பி) கோத்தா கெமுனிங் அலுவலகத்திலோ சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
மேலும், அதிகாரப்பூர்வ விண்ணப்பக் கடிதம், ROS பதிவு சான்றிதழ் அல்லது உறுதிப்படுத்தும் கடிதம், சமீபத்திய வங்கி அறிக்கை, திட்ட முன்மொழிவு அல்லது செயல் திட்டம் மற்றும் கட்டுமானம் அல்லது புதுப்பிப்பு தொடர்பான பணிகளுக்கு மேற்கோள் (Sebutharga) ஆகிய ஆவணங்களும் இணைக்கப்பட வேண்டும்.
விண்ணப்பங்களை n50dunkotakemuning@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். கூடுதல் தகவல்களுக்கு அதே மின்னஞ்சல் முகவரி அல்லது 03-5131 4354 என்ற தொலைபேசி எண்ணின் மூலம் தொடர்பு கொள்ளலாம்.


