ஷா ஆலம், ஜன 15: அனைத்து தமிழர்களுக்கும் தனது மனமார்ந்த பொங்கல் வாழ்த்துகளை செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி.குணராஜ் தெரிவித்து கொண்டார்.
இந்த திருநாள் அனைவருக்கும் வளம், நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பை கொண்டுவரட்டும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், இயற்கையின் ஆசீர்வாதங்களுக்கு நன்றி தெரிவிப்பதும், விவசாயிகளின் கடின உழைப்பை மதிப்பதும் முக்கியம் என அவர் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டார்.
பொங்கல் திருநாள் நமது சமூகத்தின் ஒற்றுமை மற்றும் நல்லிணக்க உணர்வை வலுப்படுத்துவதோடு நமது பாரம்பரியத்தையும் நினைவூட்டும் விழாவாகும் என்று அவர் விவரித்தார்.
இந்த ஆண்டு நம்பிக்கை, வெற்றி மற்றும் புதிய தொடக்கங்களால் நிறைந்ததாக இருக்க வேண்டும் என கூறி, அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை டாக்டர் ஜி.குணராஜ் முகநூல் பதிவில் தெரிவித்தார்.


