சிஜங்காங்கில் புயலில் சேதமடைந்த நான்கு பள்ளிகளில் பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன

9 ஜனவரி 2026, 9:20 AM
சிஜங்காங்கில் புயலில் சேதமடைந்த நான்கு பள்ளிகளில் பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன

ஷா ஆலம், ஜன 9 — அக்டோபர் மாதம் கடுமையான புயலில் சேதமடைந்த சிஜங்காங்கில் உள்ள நான்கு பள்ளிகளில் பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்ற வருகின்றன.

அவற்றில் மூன்று திட்டமிட்ட நேரத்திற்கு முன்பே முடிக்கப்பட்டுள்ளன என சிலாங்கூர் பொதுப்பணித் துறை (ஜே.கே.ஆர்) இயக்குநர் சுக்ரி இஷாக் தெரிவித்தார்.

பழுதுபார்க்கும் பணிகள் நிறைவடைந்துள்ள மூன்று பள்ளிகள் எஸ்.எம்.கே சிஜாங்காங் ஜெயா, எஸ்.கே சிஜாங்காங் ஜெயா மற்றும் எஸ்.கே கம்போங் மேடன் ஆகியவை ஆகும் என்று அவர் கூறினார்.

“எஸ்.கே சிஜாங்காங் ஜெயாவின் உணவகம் உட்பட பல பகுதிகள் சேதமடைந்தன, பள்ளி அமர்வு தொடங்குவதற்கு முன்பே சுத்தம் செய்யும் பணிகளை செயல்படுத்த ஜே.கே.ஆர் அப்பள்ளியுடன் இணைந்து செயல்படுகிறது.

“எஸ்.கே கம்போங் மேடனுக்கும் இதுவே பொருந்தும்; கூரை மாற்றுதல் மற்றும் மின் வயரிங் பணிகள் முடிந்துவிட்டன. மேலும், தற்போது சுத்தம் செய்யும் நிலையில் உள்ளது. "எஸ்.எம்.கே. சிஜங்காங் ஜெயாவில் பழுதுபார்க்கும் பணிகள் 90 சதவீத முன்னேற்றத்தில் உள்ளன. மேலும், இது மூன்று நாட்களில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது," என சுக்ரி மீடியா சிலாங்கூரிடம் கூறினார்.

இருப்பினும், எஸ்.கே. ஜாலான் தஞ்சோங்கில் 85 சதவீத முன்னேற்றம் உள்ள பழுதுபார்ப்பு பணிகள் முழுமையாக நிறைவடைய கால அவகாசம் தேவைப்படும் என அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.