ஷா ஆலம், ஜன 7: நேற்று எம்.பி.ஏ.ஜே நிர்வாகப் பகுதியில் நடத்தப்பட்ட ``Ops Terjah Kenderaan Berat`` அமலாக்க நடவடிக்கையில், 11 சம்மன்கள் பிறப்பிக்கப்பட்டன.
விதிமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்கும், நிர்வாகப் பகுதியில் பாதுகாப்பு இடையூறுகள் தடுப்பதற்கும் மற்றும் சீரான போக்குவரத்தை உறுதிப்படுத்துவதற்கும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என எம்.பி.ஏ.ஜே தெரிவித்தது.
"பண்டான் ப்ரிமா, பண்டார் பாரு அம்பாங் மற்றும் தாமான் கோசாஸ் ஆகிய இடங்களில் இந்த அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
"பிரிவு 48, சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 (சட்டம் 333) இன் கீழ் மொத்தம் 11 சம்மன்கள் பிறப்பிக்கப்பட்டன," என்று எம்.பி.ஏ.ஜே முகநூலில் தெரிவித்தது.
பொது பாதுகாப்பு மற்றும் உள்ளூர்வாசிகளின் அமைதியைப் பாதிக்கக்கூடிய இடங்களில் கனரக வாகனங்கள் நிறுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக எம்.பி.ஏ.ஜே தெரிவித்தது.
இது தொடர்பான புகார்கள் அல்லது கருத்துகளைக் கொண்ட பொதுமக்கள் எம்.பி.ஏ.ஜே பொது புகார் மேலாண்மை அமைப்பு (SISPAA) மூலம் அவற்றைத் தெரிவிக்கலாம் அல்லது 1-800-22-8100 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு அழைக்கலாம்.


