ஷா ஆலம், ஜன 6: திடக்கழிவு மேலாண்மை மற்றும் பொது சுத்திகரிப்பு கழகத்தின் (SWCorp) அமலாக்க அதிகாரிகள், பொது இடங்களில் குப்பை வீசுவதை தடுக்க இரகசிய நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.
பிரச்சனைக்குரிய பகுதிகளாக அடையாளம் காணப்பட்ட இடங்களில் குப்பைகளை வீசும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்வதை இந்த நடவடிக்கையின் நோக்கமாகும் என அதன் தலைவர் ஹீ லாய் சியான் கூறினார்.
அமலாக்க நடவடிக்கையில் ரோந்துகள் மற்றும் சிசிடிவி கேமராக்களை கண்காணிப்பது ஆகியவை அடங்கும் மற்றும் குற்றம் புரியும் அனைவருக்கும் நோட்டிஸ் (NPK) வழங்கப்படும் என லோய் சியான் உத்துசான் மலேசியாவிடம் கூறினார்.
“இந்த அமலாக்க நடவடிக்கையில் சீருடை அணிந்த அமலாக்க அதிகாரிகள் அல்லது பொதுமக்கள் போல் மாறுவேடமிட்ட உறுப்பினர்கள் ஈடுபடுவார்கள்.
“கூடுதலாக, களத்தில் ஒருங்கிணைந்த அமலாக்க நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் SWCorp தொடர்புடைய அமலாக்க நிறுவனங்களுடன் ஒத்துழைப்பு வழங்கும்” என்று அவர் கூறினார்.
"அனைத்து அமலாக்க நடவடிக்கைகளும் நியாயமாகவும் விவேகமாகவும் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வதற்காக அமலாக்க அதிகாரிகளுக்கு போதுமான பயிற்சி வழங்கப்பட்டுள்ளது," என்று அவர் விளக்கினார்.
முன்னதாக, பொது இடங்களில் குப்பைகளை வீசும் வெளிநாட்டினர் மற்றும் குழந்தைகள் உட்பட எந்தவொரு தனிநபருடனும் வீட்டுவசதி மற்றும் உள்ளூர் அரசாங்க அமைச்சகம் (KPKT) சமரசம் செய்யாது என்று வலியுறுத்தியது.
இது சம்பந்தமாக, எந்தவொரு தரப்பினரும் சட்டத்திலிருந்து விடுபடவில்லை என்பதை நிரூபிக்க இந்த ஆண்டு சமூக சேவை உத்தரவை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது.


