ஷா ஆலம், ஜன 5: கடந்த மாதத்திலிருந்து சுபாங் ஜெயாவில் உள்ள குட் இயர் கோர்ட் 3, 4, 5, 6, 8 மற்றும் 10 பகுதிகளில் கழிவுகளைக் கொட்டும் பிரச்சனை தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த பிரச்சனைக்கு கேடிஇபி கழிவு மேலாண்மை (கேடிஇபிடபிள்யூஎம்) விரைவாகச் செயல்பட்டு, உடனடி நடவடிக்கை எடுத்துள்ளது.
குப்பைத் தொட்டிகளில் உள்ள குப்பைகள் சாலையோரங்களிலும் பொது இடங்களிலும் நிரம்பி வழிவதாகவும், சேகரிக்கும் அட்டவணை குறித்து உறுதியாகத் தெரியாமல், சுற்றுச்சூழலின் தூய்மையைப் பாதிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த இஅடங்களுக்கு கேடிஇபிடபிள்யூஎம் குழு விரைந்துள்ளது, குப்பைகளை அகற்ற நேற்று இரவு வரை சுத்தம் செய்யும் பணிகள் தொடர்ந்தன.
மேலும், பல நாட்களாக அந்தப் பகுதியில் குப்பை சேகரிக்கும் லாரியை நாங்கள் பார்க்கவில்லை என்றும், சிலர் தெரிவித்தனர்.
“என்ன நடக்கிறது என்று எங்களுக்குத் தெரியவில்லை,`` என்றனர்.
“குப்பைத் தொட்டிகள் நிரம்பியுள்ளன, குப்பை சிதறிக்கிடக்கின்றன, அதை சேகரிக்க யாரும் வரவில்லை,” என குடியிருப்பாளர் ஒருவர் கூறினார்.
இந்த நிலைமை, குறிப்பாக அப்பகுதிகளில் வசிக்கும் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு ஏற்படும் உடல்நல அபாயங்கள் குறித்த கவலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளின் தூய்மையை மீட்டெடுக்க துப்புரவுப் பணிகள் முழுமையாக மேற்கொள்ளப்படும் என KDEBWM உறுதியளித்துள்ளது.



