ஷா ஆலம், ஜன 5: இந்த ஆண்டு முழுவதும் பத்து தீகா தொகுதியில் அடிக்கடி வேலைவாய்ப்பு சந்தைகளை ஏற்பாடு செய்வதன் மூலம் அதிகளவில் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
பத்து தீகா பகுதியில் உள்ள நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் சமூக பாதுகாப்பு அமைப்பு (Socso) ஆகியவற்றுடன் மூலோபாய ஒத்துழைப்பு மூலம் இந்த முயற்சி செயல்படுத்தப்படும் என்று அதன் பிரதிநிதி டேனியல் அல் ரஷீட் ஹரோன் தெரிவித்தார்.
உள்ளூர்வாசிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த, குறிப்பாக வேலை வாய்ப்புகள் மற்றும் தொழிலாளர் நலனைப் பாதுகாக்க இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று அவர் கூறினார்.
"அதே நேரத்தில், சொக்சோ திட்டத்தின் கீழ் அவர்கள் பாதுகாக்கப்படுவதையும் சிறந்த நலன்புரி உத்தரவாதங்களைப் பெறுவதையும் உறுதி செய்வதற்காகக், கிக் எகானமி தொழிலாளர்கள் மீதும் கவனம் செலுத்தப்படும்," என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் கூறினார்.
வேலைவாய்ப்பு அம்சத்தைத் தவிர, இளைஞர்களின் எதிர்காலக் கல்வியிலும் கவனம் செலுத்தப்படும், குறிப்பாக அவர்கள் எஸ்.பி.எம் தேர்வோடு கல்வியை கைவிட்டு விடாமல் இருப்பதிலும் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என டேனியல் கூறினார்.


