ஷா ஆலம், 3 ஜன: சிலாங்கூர் நீர் சேவை நிர்வாகத்தில் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. 2021 முதல் அமல்படுத்தப்பட்ட SJAM (Skim Jaminan Air Mentah) திட்டத்தின் வெற்றிகரமான அமுலாக்கம் 2025 முழுவதும் நீர் சுத்திகரிப்பு ஆலைகளின் (LRA) செயல்பாடுகள் இடரின்றி செயல்பட்டன.
மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறுகையில்,மூல நீர் மாசுபாட்டு அபாயங்களை எதிர்கொண்டாலும், மாநில அரசு மக்களுக்கு சுத்தமான மற்றும் ஸ்திரமான நீர் வழங்கலை உறுதி செய்யும் திறனை நிரூபித்து சாதனை புரிந்துள்ளது.
“LRA-களின் சிறந்த செயல்பாடுகளால் நீர் மாசு பாடு காரணமாக நீர் வினியோகம் நிறுத்தப் படவில்லை. இது தீவிர கண்காணிப்பு, தொடர்ச்சியான அமலாக்கம் மற்றும்விரைவான நடவடிக்கைகளால் சாத்தியமானது.
2025 ஆண்டு முழுவதும் இந்த வெற்றி மாநில அரசு சிலாங்கூரை அறிவுப்பூர்வமாக, ஸ்திரமாக மற்றும் மக்கள் நலன் சார்ந்து நிர்வகிப்பதை நிரூபிக்கிறது” என்று அவர் பேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.கடந்த ஆகஸ்ட் மாதம் மீடியா சிலாங்கூருடனான நேர்காணலில், மாநில பொருளாதார திட்ட அலகு இயக்குநர் டத்தோ ஜோஹாரி அனுவார் கூறுகையில், கடந்த ஆண்டு மே மாதம் முழுமையடைந்த SJAM பேஸ் 1, மூன்று மாசுபாட்டு சம்பவங்களின் தாக்கம் இருந்தபோதிலும் நீர் வழங்கல் இடையூறை தவிர்த்தது.
ஜூலை 5, 15 மற்றும் 28 தேதிகளில் கண்டறியப்பட்ட நீர் மாசுபாடுகளை SJAM திட்டத்தின் நான்கு பேக்கேஜ்களின் தயார் நிலையால் தீர்க்க முடிந்தது என்றார். “இந்த மாசுபாட்டு சம்பவங்களை கையாளும் திறன், பயனர்கள் பாதிக்கப்படாமல் சுத்தமான நீர் வழங்கலை தொடர்ந்து பெற உறுதி செய்தது” என்றார்.
இந்த வெற்றி முதல் சிலாங்கூர் திட்டத்தின் (RS-1) இலக்குடன் ஒத்துப்போகிறது என்று அவர் கூறினார். அதாவது மக்களுக்கு 24 மணி நேர நீர் வழங்கலை உறுதி செய்வது. இது மாசுபாட்டு சவால்களை எதிர் கொண்டாலும் மாநில நீர் நிர்வாக அமைப்பின் திறனை நிரூபிக்கிறது








