செமரு எரிமலை ஆறு முறை வெடித்ததில் 1,200 மீட்டர் உயரத்திற்கு புகை மூட்டம்

22 டிசம்பர் 2025, 6:36 AM
செமரு எரிமலை ஆறு முறை வெடித்ததில் 1,200 மீட்டர் உயரத்திற்கு புகை மூட்டம்

இஸ்தான்புல், டிசம்பர் 22: இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள செமரு எரிமலை கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆறு முறை வெடித்துள்ளது. இதன் சாம்பல் மற்றும் புகை மூட்டங்கள் 1,200 மீட்டர் உயரத்தை எட்டியதாக அனடோலு ஏஜென்சி தெரிவித்துள்ளது.

லுமாஜாங் மற்றும் மலாங் மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ள இந்த எரிமலை, கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இதன் நிலை III எச்சரிக்கை நிலையில் உள்ளது என்று இந்தோனேசிய அரசு செய்தி நிறுவனமான அந்தாரா செய்தி தெரிவித்துள்ளது.

மேலும் 13 கிலோமீட்டர் சுற்றளவில் பெசுக் கோபோகன் வழியாக தென்கிழக்கு துறையில் அனைத்து நடவடிக்கையையும் தவிர்க்குமாறு இந்தோனேசியாவின் எரிமலை மற்றும் புவியியல் பேரிடர் தணிப்பு மையம் (PVMBG) பொதுமக்களை அறிவுறுத்தியது. எரிமலையிலிருந்து ஐந்து கிலோமீட்டர் சுற்றளவில் கற்கள் பறந்து தாக்கும் அபாயம் இருப்பதால், அந்தப் பகுதியில் எந்தவொரு செயல்பாடுகளையும் மேற்கொள்ள பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வகைantarabangsa

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.