சபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று பிற்பகல் 2,616 ஆக உயர்வு

26 பிப்ரவரி 2026, 2:53 AM
சபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று பிற்பகல் 2,616 ஆக உயர்வு

கோத்தா கினபாலு, பிப் 26- சபாவில் மேலும் நான்கு மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அங்குள்ள தற்காலிக நிவாரண மையங்களில் (PPS) தஞ்சம் புகுந்துள்ளோரின் எண்ணிக்கை மாலை 4 மணி நிலவரப்படி 2,616 ஆக அதிகரித்துள்ளது.

சபா மாநிலப் பேரிடர் மேலாண்மைக் குழுவின் செயலகம் வெளியிட்ட அறிக்கையின்படி, தற்போது மெம்பாகுட், சிபித்தாங், சூக், பியூஃபோர்ட் மற்றும் பித்தாஸ் ஆகிய ஐந்து மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

"மொத்தம் 10 நிவாரண மையங்கள் இதுவரை திறக்கப்பட்டுள்ளன. மெம்பாகுட்டில் உள்ள ஒரு மையத்தில் 211 பேரும், பியூஃபோர்ட்டில் உள்ள ஒரு மையத்தில் 359 பேரும், சூக்கில் உள்ள ஒரு மையத்தில் 73 பேரும், சிபித்தாங்கில் உள்ள இரண்டு மையங்களில் 196 பேரும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

"பித்தாஸில் மேலும் ஐந்து மையங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மதியம் 1,695 ஆக இருந்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மாலை 4 மணியளவில் 1,777 ஆக உயர்ந்துள்ளது," என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.

இந்த ஐந்து மாவட்டங்களிலும் மொத்தம் 140 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.