சிலாங்கூரில் உள்ள எட்டு தமிழ்ப்பள்ளிகள் நில சிக்கலை தீர்க்க மாநில தமிழ்ப்பள்ளிகள் சிறப்பு அமலாக்க செயற்குழுவினர் தொடர்ந்து முயற்சி- பாப்பாராய்டு வீரமான் தகவல்

17 டிசம்பர் 2025, 5:08 AM
சிலாங்கூரில் உள்ள எட்டு தமிழ்ப்பள்ளிகள் நில சிக்கலை தீர்க்க மாநில தமிழ்ப்பள்ளிகள் சிறப்பு அமலாக்க செயற்குழுவினர் தொடர்ந்து முயற்சி- பாப்பாராய்டு வீரமான் தகவல்

ஷா ஆலாம், டிச 16- சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகள் சிறப்பு அமலாக்க செயற்குழுவினர் தங்களின் கடமைகளை செவ்வனே ஆற்றி வருகின்றனர். அவ்வகையில் நிலப்பட்டா பெறுவதில் சில சிக்கல்களை எதிர்நோக்கியுள்ள இதர தமிழ்ப் பள்ளிகளுக்கும் தங்களது பணியை மேற்கொண்டு வருவதாக சிலாங்கூர் மாநில மனிதவளம் மற்றும் வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு பாப்பாராய்டு வீரமான் கூறினார்.

சரஸ்வதி தமிழ்ப்பள்ளி, பந்திங் தெலுக் டத்தோ தமிழ்ப் பள்ளி, சீ போர்ட் தமிழ்ப் பள்ளி, பூச்சோங் கின்றாரா தமிழ்ப்பள்ளி, பத்து அம்பாட் தமிழ்ப்பள்ளி, வெஸ்கண்ட்றி தமிழ்ப்பள்ளி போன்ற பள்ளிகள் எதிர்நோக்கும் நிலப் பிரச்சனைகளுக்கு சுமுகமான முறையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூடிய விரைவில் அவற்றிற்கு நல்லதொரு முடிவுக்கு கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது.

சிலாங்கூர் மாநில அரசின் சிறப்பான ஆதரவோடு தமிழ்ப் பள்ளிகளின் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்று அவர் ஆணித்தரமாக குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.கணபதி ராவ், மாநிலத் தமிழ்ப் பள்ளிகள் சிறப்பு அமைப்புக்கு செயற்குழுவின் தலைவர் அன்புக்கழகு, செயலாளர் சுகுமாரன், நிர்வாக குழு உறுப்பினர்கள், சம்பந்தப்பட்ட தமிழ்ப்பள்ளிகளின் பள்ளி மேலாளர் வாரியம், பெற்றோர் - ஆசிரியர் சங்கப் பொறுப்பாளர்கள் ஆகியோர்  கலந்து கொண்டனர்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.