ஷா ஆலம், டிச 12: ஷா ஆலம் வாகனம் இல்லா நாள், நிகழ்வை முன்னிட்டு செக்ஷன் 14 இல் உள்ள பல முக்கிய வழித்தடங்கள் தற்காலிகமாக மூடப்படும் என்று ஷா ஆலம் மாநகராட்சி அறிவித்துள்ளது.
மூடப்படும் வழித்தடங்கள்:
-ஷா ஆலம் சுதந்திர சதுக்கம்
- செக்ஷன் 14 அருகிலுள்ள சாலைகள்
இந்த நிகழ்ச்சி டிசம்பர் 14, 2025 (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.30 மணி முதல் காலை 9.30 மணி வரை நடைபெறும்.
சாலை பயனர்கள் தங்களின் பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டு, இக்காலக்கட்டத்தில் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு எம்பிஎஸ்ஏ அறிவுறுத்துகிறது.
``ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் மிகவும் வருந்துகிறோம்.`` மேலும், மக்களின் ஒத்துழைப்புக்கு எம்பிஎஸ்ஏ நன்றி தெரிவித்தது.


