புத்ராஜெயா, டிசம்பர் 5 — Rancakkan MADANI Bersama Malaysiaku நிகழ்ச்சி இன்று காலை 8 மணிக்கு புத்ராஜெயா வளாகத்தில் பல்வேறு சீருடைப் படைகள் மற்றும் இசைக் குழுக்களின் கண்கவர் அணிவகுப்புகளுடன் சிறப்பாகத் தொடங்கியது.
மடாணி அரசாங்கம் மூன்று நாட்கள் ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சியின் மீது மக்கள் ஆர்வம் மிகுந்ததாக இருந்தது. மேலும் பெர்னாமா தொலைக்காட்சி மேற் கொண்ட கண்காணிப்பில், பொதுமக்கள் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க ஆவலுடன் காத்திருப்பது தெரியவந்தது.
இந்த விழா மடாணி கொள்கையின் எட்டு முக்கிய கூறுகளை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. அவை
மடாணி இளைஞர், மடாணி மக்களின் தயாரிப்பு. மடாணி மக்கள் நல்வாழ்வு, மடாணி மக்களின் சகோதரத்துவம், மடாணி விற்பனை மலேசியா வருகை ஆண்டு 2026, ஆசியான் தலைமைத்துவம் மற்றும் மடாணி அரச தந்திரம் ஆகும்.
மேலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் புத்ராஜெயா சதுக்கத்தில் நடைபெறும் பொது சேவை சீர்திருத்த தேசிய மாநாட்டில், 34 அமைச்சுக்கள், துறைகள் மற்றும் நிறுவனங்கள் தங்களின் தகவல் மற்றும் சேவைகளை வழங்க விருக்கின்றன.
இதனுடன், மோட்டார் சைக்கிள் இயந்திர எண்ணெய் மாற்றும் சேவை, இலவசமாக வழங்கப்படும் 5,500 மோட்டார் சைக்கிள் தலைகவசங்கள், மற்றும் அடையாள அட்டை (IC) மாற்றும் வசதிகளும் வழங்கப்படுகின்றன. இளைஞர் பங்கேற்பை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு விளையாட்டு மற்றும் திறன் போட்டிகளும் ஏற்பாடாகியுள்ளன.
சுமார் 3 லட்சம் பேர் மூன்று நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விழாவின் நிறைவு நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், அதில் பிரதமர் டத்தோ’ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்து கொள்ளவுள்ளார்.


