கம்போங் பாரு ரமலான் சந்தை வியாபாரிகள், வருகையாளர்களைப் பிரதமர் சந்தித்தார்

25 பிப்ரவரி 2026, 2:47 AM
கம்போங் பாரு ரமலான் சந்தை வியாபாரிகள், வருகையாளர்களைப் பிரதமர் சந்தித்தார்

கோலாலம்பூர், பிப். 25 - பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், ஜாலான் ராஜா அலாங்கில் உள்ள கம்போங் பாரு ரமலான் சந்தைக்கு வருகை தந்து பார்வையிட்டார்.

 மாலை 6.10 மணியளவில் அங்கு வருகை புரிந்த அவர், சுமார் 30 நிமிடங்கள் தலைநகரில் புகழ்பெற்ற அந்த ரமலான் சந்தையில் உள்ள கடைகளுக்குச் சென்று வியாபாரிகள் மற்றும் வருகையாளர்களுடன் கலந்துரையாடினார்.

 வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்களுடன் பிரதமர் அன்புடன் உரையாடியதோடு, ரமலான் மாதம் முழுவதுமான விற்பனை மற்றும் அதற்கான முன் ஏற்பாடுகளைக் குறித்தும் கேட்டறிந்தார்.

வருகையாளர்களும் இந்த வாய்ப்பை நழுவவிடாமல், பிரதமருடன் நினைவுப் புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டனர்.

 பிரதமரின் இந்த வருகையின் போது, பிரதமர் துறை அமைச்சர் ஹன்னா இயோ, மற்றும் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோ அர்மிசான் முகமது அலி ஆகியோரும் உடன் இருந்தனர்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.