சிப்பாங், பந்திங் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் கட்டுப்பாட்டுக்குள்; தீயணைப்புத் துறை 24 மணி நேரமும் கண்காணிப்புஷா

29 நவம்பர் 2025, 7:50 AM
சிப்பாங், பந்திங் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் கட்டுப்பாட்டுக்குள்; தீயணைப்புத் துறை 24 மணி நேரமும் கண்காணிப்புஷா
சிப்பாங், பந்திங் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் கட்டுப்பாட்டுக்குள்; தீயணைப்புத் துறை 24 மணி நேரமும் கண்காணிப்புஷா
சிப்பாங், பந்திங் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் கட்டுப்பாட்டுக்குள்; தீயணைப்புத் துறை 24 மணி நேரமும் கண்காணிப்புஷா

ஷா ஆலம், நவம்பர் 28 — சிப்பாங் மற்றும் பந்திங் சுற்றியுள்ள பல பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள நிலைமை தற்போது கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (JBPM) தொடர்ந்து ரோந்து சென்று நிலையை நெருக்கமாக கண்காணித்து வருகிறது.

சிப்பாங் தீயணைப்பு நிலையத்தின் மேற்பார்வையாளர் நசிருல் அக்மல் ஏ. ரஹ்மான் கூறுகையில், பல வெள்ள பாதிப்புக்கு உள்ளானவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.“சிப்பாங்கில் உள்ள கம்போங் சின்சாங்கில் மூன்று பாதிக்கப்பட்டவர்கள் —  தண்ணீர் உயர ஆரம்பித்தபோது மாரடைப்பு ஏற்பட்ட 42 வயது ஆண் மற்றும் இரண்டு முதியவர்கள் சுங்கை பிலெக் சுகாதார அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்றார்.

வெள்ளம் நீடிக்காது என்பதால் தற்காலிக நிவாரண மையத்திற்கு (PPS) செல்ல விரும்பாத குடும்பங்களின் விருப்பப்படி மற்ற இரு பாதிக்கப்பட்டவர்கள் உயரமான பகுதிகளில் உள்ள உறவினர்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்” என்று அவர் சிலாங்கூர் மீடியாவிடம் தெரிவித்தார்.

மழை நின்றுவிட்ட போதிலும், நள்ளிரவில் கனமழை மற்றும் உயர்அலை ஏற்பட வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையுடன் இருப்பதாக நசிருல் கூறினார்.“கம்போங் சுங்கை கெரோ பாடு 1 மற்றும் கம்போங் பாடு 2 போன்ற பிற ஆபத்து மிக்க இடங்களும் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன” என்றார்.

இதற்கிடையில், சாலக் திங்கியில் சில இடங்களில் நான்கு அடி வரை உயர்ந்திருந்த நீர்மட்டம் தற்போது குறைந்து வருகிறது.“சுங்கை பினாங் செபத்தாங் மற்றும் சாலக் திங்கி பொது சந்தை ஆகிய இரு பகுதிகளில் நீர் வடிந்துவிட்டது” என்று கோலாலம்பூர் சர்வதேச விமான நிலைய (KLIA) தீயணைப்பு நிலைய தலைவர் ரசிப் மொஹ்மாட் ஹாரிஸ் தெரிவித்தார்.

38 பாதிக்கப்பட்டவர்கள் PPS-க்கு இடமாற்றம் செய்யப் பட்டுள்ளனர். அதில் உடல் பருமனால் பாதிக்கப்பட்டு ஒரு மாற்றுத் திறனாளியும் Hicom லாரி மூலம் கொண்டு செல்லப்பட்டார்.

“பிற்பகல் 3.30 மணியளவில் மழை முற்றிலும் நின்றுவிட்டது. நிலைமை மீண்டும் மோசமடைந்தால் என கருதி JBPM குழுக்களை தயார் நிலையில் வைத்துள்ளோம். விரைவு பதில் குழுக்கள் எந்த நேரத்திலும் பணியமர்த்தப்பட தயாராக உள்ளன” என்றார் அவர்.

பந்திங்கில் மழை நின்றதால் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது. இருப்பினும் இன்றிரவு மீண்டும் மழை பெய்தால் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது. பந்திங் தீயணைப்பு நிலைய தலைவர் சி. அருள் செல்வன் கூறுகையில், இன்று பிற்பகல் பெய்த மழையால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

இதனால் 10 முதல் 12 குடும்பங்கள் பாதிக்கப்பட்டன.“சில கிராமங்களில் தண்ணீர் கணுக்கால் அளவே இருந்தது. தேவைப்பட்டால் வெளியேறுமாறு குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது, ஆனால் பலர் தங்கள் வீடுகளிலேயே தங்கியுள்ளனர்” என்றார்.

பந்திங்கில் இரண்டு தற்காலிக நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளது. மீட்பு அமைப்புகளின் உதவி இன்றி குடியிருப்பாளர்கள் தாமாக மையங்களுக்கு இடம் பெயர ஆரம்பித்துள்ளனர்.

லாபுவான் டாகாங் ஆற்றின் நீர்மட்டம் பிற்பகல் 3 மணியளவில் கரையை மீறியது. ஆனால் நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை (JPS) உடனடியாக கரைப்பணி மேற்கொண்டதால் நிலைமை கட்டுப்படுத்தப்பட்டது.“புக்கிட் சாங்காங்கில் நீர்மட்டம் ஆபத்து நிலையைத் தாண்டி ஐந்து மீட்டருக்கு மேல் உள்ளது.

இன்றிரவு மழை பெய்தால் வெள்ளம் ஏற்படலாம். தீயணைப்பு மீட்பு குழுக்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளன மற்றும் முழு பகுதியிலும் ரோந்து சென்று வருகின்றன” என்று அருள் செல்வன் கூறினார்.

பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் JBPM குழுக்கள் முழு எச்சரிக்கையுடன் தொடர்ந்து ரோந்து சென்று, குறிப்பாக அதிக ஆபத்து உள்ள இடங்களில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்து வருகின்றனர்.இன்று பிற்பகல் வானிலை நிலைகளுக்கு ஏற்ப, மலேசிய வானிலை ஆய்வு மையம் சிலாங்கூர் மாநிலத்திற்கான கனமழை எச்சரிக்கையை ‘ஆபத்து’ நிலையிலிருந்து ‘எச்சரிக்கை’ நிலைக்கு தாழ்த்தியுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.