ஷா ஆலம், 28 நவம்பர்: வெப்பமண்டல புயல் ‘சென்யார்’ பலத்தைக் குறைத்து தற்போது மழைக்காற்று அமைப்பாக மாறியுள்ளது என்று மலேசிய வானிலைத் துறை தெரிவித்துள்ளது.
இந்த மழை காற்று மலேசியத் துணைக்கண்டத்தின் மையப்பகுதியில் இருந்து கிழக்குத் திசை நோக்கி சீன கடற்பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது. நள்ளிரவில் மேற்கொண்ட ரேடார் கண்காணிப்பின் படி, இந்த அமைப்பு சிலாங்கூர்- நெகிரி செம்பிலான் எல்லை கடற்கரைப் பகுதிகளில் இருந்தது.
அழுத்தம் குறைந்திருந்தாலும், மழை மேகம் உருவாகும் செயல்பாடு இன்னும் சுறுசுறுப்பாக உள்ளது. இதனால் பல பகுதிகளில் தொடர்ச்சியான கனமழையும் பலத்த காற்றும் ஏற்படும் அபாயம் தொடர்கிறது. இந்த நிலையில் மாற்றமின்றி, நாளை வரை நீடிக்கும் வாய்ப்பு உள்ளது,” என்று மெட் மலேசியா இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், இந்திய வானிலைத் துறை (IMD) இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் சென்யார் அமைப்பு அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் பலத்தைக் குறைத்துக் கிழக்கு திசை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய குறைந்த அழுத்த மழை காற்று அமைப்பு சென்யார் புயலின் மீதமுள்ள பகுதிகளைக் கொண்டதாகும்; அதில் மலாக்கா நீரிணை மற்றும் மலேசியா சுற்றியுள்ள பல பகுதிகளும் அடங்கும்


