உலு சிலாங்கூர், 27 நவம்பர்: பள்ளியில் உறங்கிக் கொண்டிருந்த மூன்று மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் ஆடவர் கைது செய்யப்பட்டார்.
புதன்கிழமை மாலை 4.16 மணியளவில் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த மூன்று புகார்களின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக உலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பிரண்டண்ட் இப்ராஹிம் ஹுசின் தெரிவித்தார். ஆரம்ப விசாரணையில், 48 வயதான அந்த நபர் தங்குமிட வளாகத்திற்குள் அனுமதியின்றி நுழைந்து, உறங்கிக் கொண்டிருந்த 16 வயதான மூன்று மாணவிகளையும் தனித்தனியாகத் தொட்டதாக நம்பப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் தங்குமிட கட்டிடத்துக்குள் நடந்தது என அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.
கோல குபு பாரு மஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு ரிமான் விண்ணப்பத்திற்கு சந்தேகநபர் இன்று கொண்டு செல்லப்பட்டார். இந்த வழக்கு சிறுவர் மீதான பாலியல் குற்றங்கள் தொடர்பான 2017 சட்டத்தின் பிரிவு 14 ன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது பிரம்படி விதிக்கப்படலாம்.


