டெங்கில், நவ 25- சிலாங்கூரில் போலிசாருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம். குமார் இதனை கூறினார்.
சிலாங்கூர் ஜாலான் பந்திங்-டெங்கில், மைல் 8 இல் சாலையோரத்தில் நேற்று இரவு துப்பாக்கி சூட்டு சம்பவம் நடந்தது.
இந்த சம்பவத்தில் போலிசாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒருவர் இறந்தார்.
புக்கிட் அமான் ஜேஎஸ்ஜே தீவிர குற்றப் பிரிவின் அதிகாரிகள், உறுப்பினர்கள் குழு இரவு 8.10 மணியளவில் பந்திங், டெங்கில், சிப்பாங் ஆகிய இடங்களில் கொள்ளை குற்றங்களைக் கண்டறிந்து தடுக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
சந்தேகத்திற்கிடமான நிலையில் ஒரு நபர் ஓட்டிச் சென்ற பெரோடுவா மைவி காரை அந்தக் குழு கண்டது.சம்பந்தப்பட்ட காரை நிறுத்த குழு முயன்றபோது, சந்தேக நபர் திடீரென காருக்குள் இருந்து போலிஸ் அதிகாரிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்ததால் போலிசார் திருப்பிச் சுட்டனர். சந்தேக நபர் இறந்துவிட்டதாக மருத்துவக் குழு உறுதிப்படுத்தியது.
முதற்கட்ட விசாரணையில் சந்தேக நபர் உள்ளூர் ஆடவர் என்று சந்தேகிக்கப்பட்டது.




