ad

அடுத்த ஆண்டு முதல் புதிய ஹோம்ஸ்டே, ஏர்பின்பி விதிமுறைகளுக்கு இணங்க தயார்: எம்.பி.பி.ஜே

24 நவம்பர் 2025, 3:55 AM
அடுத்த ஆண்டு முதல் புதிய ஹோம்ஸ்டே, ஏர்பின்பி விதிமுறைகளுக்கு இணங்க தயார்: எம்.பி.பி.ஜே
அடுத்த ஆண்டு முதல் புதிய ஹோம்ஸ்டே, ஏர்பின்பி விதிமுறைகளுக்கு இணங்க தயார்: எம்.பி.பி.ஜே

பெட்டாலிங் ஜெயா, நவம்பர் 23 — பெட்டாலிங் ஜெயா நகர மன்றம் (MBPJ) அடுத்த ஆண்டு ஜனவரி முதல் அமலுக்கு வரவுள்ள குறுகிய கால வாடகைக்கு வீடுகளை விடும் (தங்குமிட) விதிமுறைகளுக்கு முழுமையாக இணங்க தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

மாநகர் டத்தோ  பண்டார்  மொஹமாட் ஜாஹ்ரி சாமிங்கோன் கூறுகையில், ஏர்பின்பி உள்ளிட்ட இயக்குநர்களின் பிரதிநிதிகள் கோரிக்கை வைத்தால் தொடர்புடைய தரப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தயார் என்றார்.

“இடங்களின் பொருத்தத்தை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். விதிமுறைகள் இறுதி செய்யப் பட்டதும் அவற்றைப் பின் பற்றுவோம். ஆனால் களத்தில் இருந்து கோரிக்கைகள் வந்தால் அவற்றை மறுஆய்வு செய்ய முயற்சிப்போம்,” என்றார். இன்று  கோத்தா டாமன்சாராவில் நடைபெற்ற **Sustainable Economy @ CBS** நிகழ்ச்சியில் சிலாங்கூர் தெங்கு பெர்மைசூரி தெங்கு பெர்மைசூரி ஹஜ்ஜா நோராஷிகின் கலந்து சிறப்பித்த நிலையில், ஜாஹ்ரி செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.

முன்னதாக, மாநில அரசு அடுத்த ஆண்டு ஜனவரி முதல் ஏர்பின்பி போன்ற **குறுகிய கால வாடகை தங்குமிடங்களுக்கு ஆண்டுக்கு அதிகபட்சம் 180 இரவுகள் அல்லது 6 மாதங்கள்** மட்டுமே அனுமதிக்கப்படும் என்று அறிவித்திருந்தது.

உள்ளாட்சி மற்றும் சுற்றுலாத் துறை மாநில நிர்வாக சபை உறுப்பினர் டத்தோ இங் சுய் லிம் கூறுகையில், புத்ராஜெயா வின் குறுகிய கால வாடகை தங்குமிட வழிகாட்டுதல்கள் அடுத்த மாதம் வெளியிடப்பட்ட பின்னர் மாநில அரசு மறு ஆய்வு செய்து இறுதி முடிவை எடுக்கும் என்றார்.ஹோட்டல் இயக்குநர்களிடம் இருந்து வரும் புகார்களைத் தொடர்ந்து ஏர்பின்பி செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என்றும், ஏர்பின்பி இயக்குநர்கள் எந்த ஒரு முறையான சட்ட விதிகளுக்கும் கட்டுப்படுத்தப் படுவதில்லை என்பதால் இது **நியாயமற்ற போட்டியை** உருவாக்குவதாக அவர்கள் குற்றம் சாட்டுவதாக வும் அவர் விளக்கினார்.

இதற்கு முன்பு டேவான் ராக்யாட்டில் தெரிவிக்கப் பட்டதாவது: குறுகிய கால வாடகை தங்குமிடங்களுக்கான வரைவு வழிகாட்டுதல்கள் அமைச்சரவை ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்பட்டு, இந்த ஆண்டு இறுதிக்குள் உள்ளூர் அரசாங்கங்களுக்கான தேசிய கவுன்சிலுக்கு (MNKT) அனுப்பப்பட்டு அமலாக்கப்படும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.