ஷா ஆலம், நவ 1;- கோத்தா கெமுனிங் தீபாவளி கொண்டா- ட்டம் மக்களின் ஆதரவுடன் சிறப்பாக நடைப் பெற்றதற்கு அனைத்து தரப்புக்கும் நன்றி தெரிவிப்பதாக ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினர் திரு. ராமு நடராஜன் கூறினார்.
இந்த நிகழ்ச்சியைத் தாம் தனியாக மேற்கொள்ளாமல் MBSA ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் ZON 9,10,12,13,14 ஆகிய உறுப்பினர்களின் ஆதரவுடனும் KKI இந்திய தலைவர்களின் ஆதரவுடனும் மேற்கொள்ளப்பட்டது என்று ராமு மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
கடந்த மூன்று மாதங்களாக இதற்கான பணிகளைத் திட்டமிட்டு மேற்கொண்டதோடு இன்று அதன் பலனாக நிகழ்வினை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளோம் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த கோத்தா கெமுனிங் தீபாவளி பொது உபசரிப்பு 2025 நிகழ்ச்சியின் ஏற்பாட்சு குழு தலைவராக திரு. ராமு நடராஜன் விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.




