ஷா ஆலம், அக் 17 — பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஒதுக்கப்பட்ட வாகன நிறுத்துமிடங்கள் விரைவில் முழு நேர அடிப்படையில் இயங்கவிருக்கின்றன என தி ஸ்டார் தெரிவித்துள்ளது.
நகரம் முழுவதும் உள்ள 1,000 ஒதுக்கப்பட்ட வாகன நிறுத்துமிடங்கள் 24 மணி நேர பயன்பாட்டுக்காக மாற்றப்படவுள்ளன. கூடுதலாக, தற்போதைய 54 நீல கோடு நிறுத்துமிடங்களும் சிவப்பு நிறமாக மாற்றப்படவுள்ளதாக பெட்டாலிங் ஜெயா மேயர் முகமத் ஜஹ்ரி சமிஙோன் தெரிவித்தார்.
மொத்தத்தில், 1,054 வாகன நிறுத்துமிடங்கள் 24 மணி நேர பயன்பாட்டுக்காக ஒதுக்கப்படும். இவை மாதம் RM400 கட்டணத்தில் வாடகைக்கு விடப்படும் என்று அவர் கூறினார்.
முன்பு, நீல கோடு கொண்ட நிறுத்துமிடங்கள் வணிக நோக்கத்திற்காக வாடகைக்கு வழங்கப்பட்டு, முழு நேர நிறுத்துமிடங்களாக பயன்படுத்தப்பட்டன. சிவப்பு கோடு கொண்டவை தொழில்நேரங்களில் மட்டுமே பயன்படுத்த ஒதுக்கப்பட்ட நிறுத்துமிடங்களாக இருந்தன.
இந்த நடவடிக்கை எம்பிபிஜே 2026ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் முயற்சிகளில் ஒன்றாகும் மற்றும் இது நகரசபையின் வருவாயை அதிகரிக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2026ஆம் ஆண்டில் நிறுத்துமிடம் அபராத வருவாய் RM17.66 மில்லியனிலிருந்து RM15.95 மில்லியனாக, சுமார் RM1.7 மில்லியன் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மாநில அரசின் புதிய நிறுத்துமிட ஒப்பந்தத்தின் மூலம் கடுமையான கண்காணிப்பு அமல்படுத்தப்படும். இதனால் மக்கள் விதிமுறைகளை பின்பற்றி சரியாக கட்டணம் செலுத்துவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் கூறினார்.