MH2610 விமானம் முழுமையாகப் பெண்களால் கையாளப்பட்டது

19 செப்டெம்பர் 2025, 7:14 AM
MH2610 விமானம் முழுமையாகப் பெண்களால் கையாளப்பட்டது

கோலாலம்பூர், செப் 19 - கோலாலம்பூரிலிருந்து கோத்தா கினபாலுவுக்குச் சென்ற MH2610 விமானம் தரைவழி செயல்பாடுகள் முதல் விமானி அறை வரை, முற்றிலும் பெண்கள் குழுவுடன் புறப்பட்டது. இதன் மூலம் மலேசிய ஏர்லைன்ஸ் (MAS) வரலாறு படைத்தது.

செக்-இன் முகவர்கள், பொறியாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் முதல் கேபின் பணியாளர்கள் மற்றும் விமானிகள் வரை, பயணத்தின் ஒவ்வொரு கட்டமும் பெண்களால் முழுமையாகக் கையாளப்பட்டது. இது விமானப் பயணத்தில் பெண்களின் வலிமை, நிபுணத்துவம் மற்றும் தலைமைத்துவத்தை பிரதிபலிக்கிறது.

“மலேசிய விமானப் போக்குவரத்துக் குழுமத்தின் பணியாளர்களில் பெண்கள் இப்போது 36 சதவீதமாக உள்ளனர். சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தின் (IATA) 25by2025 முன்முயற்சி, இந்த மைல்கல் வெறும் முன்னேற்றத்தை மட்டுமல்ல, வானத்திற்கு எல்லைகள் இல்லை என்பதற்கான சக்திவாய்ந்த நினைவூட்டலையும் குறிக்கிறது,” என்று விமான நிறுவனங்கள் ஒரு முகநூல் பதிவில் தெரிவித்தன.

இது சக ஊழியர்களையும் எதிர்கால விமானிகளையும் பெரிய கனவுகளைக் காணவும் தடைகளை உடைக்கவும் ஊக்குவிக்கும் என்று MAS நம்புகிறது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.