ad

நாளை ஏஹ்சான் மார்ட் கிளையில் மலிவு விற்பனை ஏற்பாடு

17 செப்டெம்பர் 2025, 4:36 AM
நாளை ஏஹ்சான் மார்ட் கிளையில் மலிவு விற்பனை ஏற்பாடு

ஷா ஆலம், செப் 17 : நாளை ஏஹ்சான் மார்ட் செக்‌ஷன் 14 கிளையில் சிலாங்கூர் விவசாய மேம்பாட்டு கழகத்துடன் (பிகேபிஎஸ்) இணைந்து ஏஹ்சான் ரஹ்மா விற்பனை நடைபெறும். இந்த விற்பனை காலை மணி 9 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

“பிகேபிஎஸ் உடன் இணைந்து, தேவைப்படுபவர்களுக்குக் குறிப்பாக வாழ்க்கைச் செலவு அதிகரிப்பைத் தொடர்ந்து குறைந்த வருமானம் பெறும் பிரிவினருக்கு நன்மைகளை வழங்கும் நடவடிக்கைகளில் நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுகிறோம்.

“ஏஹ்சான் மார்ட்டில் மலிவான மற்றும் தரமான அடிப்படை பொருட்களை பெறுங்கள்”.

இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 12.00 வெள்ளிக்கும் மாட்டிறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும் பி கிரேட் முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00வெள்ளிக்கும் 2 கிலோ சமையல் எண்ணெய் 10.00 வெள்ளிக்கும் 5 கிலோ அரிசி 13.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது. இன்னும் கூடுதலாகப் பல பொருட்கள் இந்த மலிவு விற்பனையில் சேர்க்கப்பட்டுள்ளன.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.