ad

அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் தீபாவளி பற்றுச் சீட்டுகளுக்கான விண்ணப்பங்கள் திறப்பு

15 செப்டெம்பர் 2025, 6:03 AM

ஷா ஆலம், செப். 15 - இவ்வாண்டு தீபாவளியை முன்னிட்டு மாநில அரசினால் வழங்கப்படும் ஜோம் ஷோப்பிங் இலவச பற்றுச் சீட்டுகளின் விநியோகத்திற்காக பொதுமக்களிடமிருந்து   மாநிலத்திலுள்ள அனைத்து 56 தொகுதிகளும் விண்ணப்பத்தை பெற்று வருகின்றன.

இந்த திட்டத்திற்கான விண்ணப்பங்கள் இம்மாதம் 22ஆம் தேதி திறக்கப்பட்டு பற்றுச் சீட்டுகள் முடியும் வரை  அமலில் இருக்கும்.

விண்ணப்பங்கள் திறக்கப்படுவது தொடர்பான தகவல்கள் அடங்கிய விளக்கப்படங்களை பாண்டான் இண்டா, கின்ராரா, லெம்பா ஜெயா, கோத்தா கெமுனிங், கோத்தா டாமன்சாரா, பண்டார் உத்தாமா, சுங்கை காண்டீஸ் உள்ளிட்ட தொகுதிகள்  தங்கள் முகநூல் பக்கங்களில் வெளியிட்டுள்ளன.

இவ்வாண்டு  தீபாவளியை முன்னிட்டு   44 லட்சம் 30 ஆயிரம் வெள்ளி செலவில் 200 வெள்ளி மதிப்பிலான 22,150 பற்றுச் சீட்டுகளை மாநில அரசு 56 தொகுதிகளுக்கு பகிர்ந்தளித்துள்ளதாக மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு அண்மையில் கூறியிருந்தார்.

செந்தோசா சட்டமன்றத் தொகுதிக்கு மிக அதிகமாக அதாவது 700 பற்றுச் சீட்டுகள் ஒதுக்கப்ட்டுள்ள வேளையில் இதர கொகுதிகளுக்கு 500 அல்லது  அதற்கும் குறைவான பற்றுச்சீட்டுகள் வழங்கப்படுகின்றன.

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட தொகுதியைச் சேர்ந்தவராகவும்   மாதம் 3,000 வெள்ளிக்கும் குறைவான குடும்ப வருமானத்தைக கொண்டவராகவும்
இருக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும். புதிய விண்ணப்பதாரர்களுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும்.

மூத்த குடிமக்கள் உதவித் திட்டம் (எஸ் எம்.யு.இ.) மாற்றுத் திறனாளிகள் உதவித் திட்டம் மற்றும்  (எஸ்.எம்.ஐ.எஸ்.) திட்டத்தில் இலவச பற்றுச் சீட்டு பெறுவோர் மற்றும் பிங்காஸ் பங்கேற்பாளர்கள்  தீபாவளி பற்றுச் சீட்டுத் திட்டத்தில் பங்குபெற முடியாது.

விண்ணப்பதாரர்கள் மற்றும் அவர்களின் துணைவியரின் மைகார்ட் நகல், வாக்காளர் சான்று நகல் மற்றும் சம்பள அறிக்கையை உடன் கொண்டு வர வேண்டும்.
விண்ணப்பாரங்களை சம்பந்தப்பட்ட தொகுதி சேவை மையத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.