கோலாலம்பூர், செப் 8: சாரா உதவி திட்டத்தின் மூலம் மக்கள் அனுபவிக்க வேண்டிய நன்மைகளைப் பாதிப்படைய செய்யும் எந்தவொரு தரப்பினருடனும் அரசாங்கம் சமரசம் செய்யாது.
ஒரு சில வர்த்தகர்கள் பொருட்களின் விலைகளை உயர்த்துவதாக சமூக ஊடகங்களில் பல பதிவுகள் இருப்பதை தனது அரசாங்கம் கவனத்தில் கொண்டுள்ளதாக இரண்டாவது நிதியமைச்சர் டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் கூறினார்.
“இச்செயல் ஏற்பட்டால் விலைக் கட்டுப்பாடு மற்றும் இலாப எதிர்ப்புச் சட்டம் 2011 இன் கீழ் விசாரணைகள் மற்றும் நடவடிக்கை எடுக்கப்படலாம்.
"மடாணி அரசாங்கம் இப்புகார் தொடர்பாக விசாரிக்கும். "அதே நேரத்தில், பயனாளிகளுக்கு சிறப்பு விலைகளை வழங்கும் பல்பொருள் அங்காடிகள் மற்றும் சில்லறை விற்பனைக் கடைகளின் முன்முயற்சியை அரசாங்கம் பாராட்டுகிறது," என்று நிதி அமைச்சகம் (MOF) வெளியிட்ட அறிக்கையில் அவர் தெரிவித்தார்.
உடனடி விசாரணைகளை செயல்படுத்த உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகத்திற்கு (KPDN) அதிகாரப்பூர்வ புகார்களை அளிக்குமாறு பொதுமக்களை அவர் ஊக்குவித்தார்.
புகார்களை KPDN தளங்கள் மூலம் சமர்ப்பிக்கலாம். அதில் KPDN e-Complaint போர்ட்டல், https://eaduan.kpdn.gov.my/ இணைத்தளம், WhatsApp line 019-848 8000, அல்லது ஹாட்லைன் 1-800-886-800 ஆகியவை அடங்கும்.