கென்யாவில் விமான விபத்து - அறுவர் மரணம்

8 ஆகஸ்ட் 2025, 9:51 AM
கென்யாவில் விமான விபத்து - அறுவர் மரணம்

நைரோபி, ஆகஸ்ட் 8 - நேற்று கென்யாவின் கியாம்பு மாவட்டத்தில் AMREF-க்கு சொந்தமான மருத்துவ விமானம் குடியிருப்பு கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் மொத்தம் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் ஒரு மருத்துவர், இரண்டு செவிலியர்கள், ஒரு விமானி மற்றும் கட்டிடத்தில் வசித்த இருவர் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் முழு அடையாளங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டது.

இவ்விபத்தின் போது ஏற்பட்ட புகை, தீ மற்றும் மீட்பு பணிகள் இடம்பெறும் காட்சிகள் வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன.

வகைantarabangsa

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.