NATIONAL

தீ விபத்துக்கள் அதிகரித்ததால் இந்தோனேசியாவில் அவசரகால நிலை அறிவிப்பு

24 ஜூலை 2025, 4:06 AM
தீ விபத்துக்கள் அதிகரித்ததால் இந்தோனேசியாவில் அவசரகால நிலை அறிவிப்பு

இந்தோனேசியா, ஜூலை 24 - இந்தோனேசியாவில் வறட்சியினால் தீ விபத்துக்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள சோலோக் மற்றும் லிமாபுலு பகுதிகளில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளன.

சோலோக்கில் உள்ள 14 மாவட்டங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக மேற்கு சுமத்ரா மாகாணத்தின் தேசிய பேரிடர் நிர்வகிப்பு நிறுவனம் BNPB கூறியது.

மேலும், மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கருதப்படும் ரியாவ் மற்றும் தெற்கு சுமத்ரா மாகாணங்களில், தீயை அணைக்கும் முயற்சிகளுக்கு தற்போது முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

சவாலான நிலப்பரப்பு மற்றும் உபகரணங்கள் பற்றாக்குறை காரணமாக தீயை அணைக்கும் முயற்சிகள் கடினமாகி உள்ளன.

இவ்வாண்டு தொடக்கத்தியிலிருந்து ஜூலை 19ஆம் தேதிவரை ஒன்பது மாகாணங்கள் மற்றும் நகரங்களில் 140.8 ஹெக்டேர் பரப்பளவை உள்ளடக்கி குறைந்தது 64 காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

-- பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.