ஷா ஆலம், ஜூலை 23 - எதிர்வரும் செப்டம்பர் முதலாம் தேதி முதல் உதவித் தொகை
மறுசீரமைப்பு அமல்படுத்தப்பட்டப் பின்னர் மக்கள் ரோன்95 ரக
பெட்ரோலை லிட்டர் ஒன்றுக்கு 1.99 வெள்ளியில் வாங்க முடியும்.
இந்த விலைக் குறைப்பு சலுகையின் வழி 1 கோடியே 80 லட்சம்
வாகனமோட்டிகள் குறிப்பாகக் குறைந்த பட்சம் 16 வயதுடைய இளையோர்
மற்றும் கிக் பொருளதாரத் துறைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் பயன் பெறுவர்
என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.


