NATIONAL

இவ்வாண்டு மே மாதம் வரை 16.94 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையை மலேசியா பதிவிட்டுள்ளது

22 ஜூலை 2025, 5:02 AM
இவ்வாண்டு மே மாதம் வரை 16.94 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையை மலேசியா பதிவிட்டுள்ளது

கோலாலம்பூர், ஜூலை 22 - இவ்வாண்டு ஜனவரி முதல் மே மாதம் வரை மலேசியாவிற்கு வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 20.4 விழுக்காடு அதிகரித்து 16.94 மில்லியனாக இருக்கிறது.

கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 14.07 மில்லியன் சுற்றுப்பயணிகள் மலேசியாவுக்கு வருகை புரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர் 8.34 மில்லியன் வருகையாளர்களுடன் அதிக வருகையைப் பதிவு செய்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 26.5 விழுக்காடு அதிகம் என சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டு அமைச்சர் டத்தோ ஸ்ரீ தியோங் கிங் சிங் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து, இந்தோனேசியா 1.82 மில்லியன் சுற்றுலா பயணிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து சீனா 1.81 மில்லியன் வருகையாளர்களுடன் 38.8 விழுக்காடு அதிகபட்ச வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

தாய்லாந்திலிருந்த வந்த சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை 5.2 சதவீதம் அதிகரித்து 1.06 மில்லியனான உயர்ந்த வேளையில் இந்தியாவிலிருந்து 664,811 சுற்றுப் பயணிகளும் நாட்டிற்கு வந்துள்ளனர் என கணக்கெடுப்பு காட்டுகிறது.

அதுமட்டுமில்லாமல், ஆஸ்திரேலியா மற்றும் பிரிட்டனிலிருந்து வருகை புரிந்த சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கையும் முறையே 16.6 விழுக்காடு மற்றும் 8.7 விழுக்காடு உயர்ந்ததாக அறிக்கை ஒன்றின் அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.