NATIONAL

நாட்டின் பூப்பந்து கலப்பு இரட்டையர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்

17 ஜூலை 2025, 4:26 AM
நாட்டின் பூப்பந்து கலப்பு இரட்டையர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்

தோக்கியோ, ஜூலை 17 - ஜப்பான் பொது பூப்பந்து போட்டியில் வெற்றி பெற்று நாட்டின் கலப்பு இரட்டையரான கோ சூன் ஹுவாட் ஷெவோன் லாய் ஜெமி அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

தாய்லாந்தின் ருட்டனாபாக் ஒப்தோங் ஜெனிச்சா சுட்ஜைபிரபாட் ஜோடியுடன் குன் ஹுவாட் - ஷெவோன் லாய் களம் கண்டனர்.

இந்த ஆட்டத்தை 21-15, 21-10 என்ற புள்ளிகளில் சூன் ஹூவாட் ஷெவோன் லாய் ஜோடி கைப்பற்றியது. இந்த ஆட்டம் 30 நிமிடங்களில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

உலகின் ஆறாம் நிலையில் இருக்கும் அவர்கள் அடுத்து டென்மார்க் விளையாட்டளர்களுடன் மோதவுள்ளனர்.

இதனிடையே, உலகின் நான்காம் நிலையில் உள்ள நாட்டின் மற்றோர் இரட்டையரான சென் தாங் ஜி -டோ ஈ வெய் , கனடாவின் கெவின் லீ - ஜொசஃபின் ஆ. ஜோடியை 21-15, 21-19 என்ற புள்ளிகளில் தோற்கடித்தனர்.

மேலும், மற்றொரு கலப்பு இரட்டையருக்கான ஹூ பாங் ரொங் - செங் சூ இன் ஜோடி அமெரிக்காவின் பிரெஸ்லி ஸ்மித் - ஜென்னி கெய்ன் ஜோடியை 21-19, 12-21, 21-16 என்ற புள்ளிகளில் தோற்கடித்து இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியது.

-பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.