ஜோகூர் பாரு, ஜூலை 15 - இன்று முதல் 26 மணி நேரத்திற்கு தெப்ராவ் உட்பட ஜோகூர் பாருவில் 30,000க்கும் மேற்பட்ட பயனீட்டாளர்கள் நீர் விநியோக தடையை எதிர்நோக்கியுள்ளனர்.
நீர் சுத்திகரிப்பு முறையில் நீடித்த மற்றும் நீண்ட கால அடிப்படையில் நிலையான விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்காகப் பாசீர் கூடாங்கில் உள்ள சுல்தான் இஸ்கண்டார் நீர் சுத்திகரிப்பு மையத்தில் சீரமைப்பு வேலைகள் நடைபெற்று வருகிறது. அதனால்தான் நீர் விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனைகள், சிறுநீரக சுத்தகரிப்பு மையங்கள் மற்றும் தொடர்ந்து நீர் விநியோகம் தேவைப்படும் இடங்களில் அவசர தேவைக்காக டிரக் டாங்குகளில் தனது தரப்பினர் நீர் விநியோகிப்பார்கள் என ரன்ஹில் எஸ்.ஏ.ஜே. செண்டிரியன் பெர்ஹாட்டின் தலைமை நிர்வாக அதிகாரி அனுவார் அப்துல் கனி தெரிவித்தார்.
நீர் விநியோக முறையை உகந்த மற்றும் பாதுகாப்பான நிலையில் வைத்திருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த திட்டமிடப்பட்ட நீர் விநியோக தடை மேற்கொள்ளப்பட்டது.
கூடுதல் தகவல்களுக்கு ரன்ஹில் எஸ்ஏஜேயின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.ranhillsaj.com.my மற்றும் அதன் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தை நாடலாம் அல்லது 1800-88-7474 என்ற ஹாட்லைன் எண் மூலம் தொடர்பு கொள்ளலாம்.








