NATIONAL

மலேசியன் ஏர்லைன்ஸூக்கு மேலும் அதிக ஏ330நியோ விமானங்கள் - ஏர்பஸ் விற்பனை

3 ஜூலை 2025, 1:09 PM
மலேசியன் ஏர்லைன்ஸூக்கு மேலும் அதிக ஏ330நியோ விமானங்கள் - ஏர்பஸ் விற்பனை

பாரிஸ், ஜூலை 3 - ஐரோப்பாவின் விமானத் தயாரிப்பு நிறுவனமான ஏர்பஸ், மலேசியா ஏவியேஷன் குழுமத்திடமிருந்து (எம்.ஏ.ஜி.) நீண்ட தூரம் பயணிக்கக்கூடிய ஏ330நியோ  ஜெட் விமானங்களுக்கு அதிக ஆர்டர்களைப் பெறும் தருவாயில் இருப்பதாக தொழில்துறை வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.

இவ்வார இறுதியில் பிரதமர் அன்வார் இப்ராஹிம் பாரிஸ் செல்லும்போது  நாட்டின் தேசிய விமான நிறுவனமான ஏர்லைன்ஸின்  தாய் நிறுவனம் இந்த ஒப்பந்தம் குறித்து  அறிவிக்கக்கூடும் என்று அவ்வட்டாரம் தெரிவித்தது.

இந்த கொள்முதல் குறித்து கருத்து பெறுவது தொடர்பான கோரிக்கைகளுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உடனடியாகப் பதிலளிக்கவில்லை.

20 ஏ330நியோ விமானங்களுக்கான விருப்பத் தேர்வுகளை பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை தமது  குழுமம் மதிப்பீடு செய்து வருவதாகவும் அதனைத் தொடர்ந்து பெரிய வகை  ஏர்பஸ் ஏ350, போயிங் 787 அல்லது போயிங் 777X ஜெட் விமானங்களைச் சேர்க்க விமானத் தயாரிப்பாளர்களிடையே போட்டி ஏற்படும் என்றும் மலேசியன் எவியேஷன் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் இஷாம் இஸ்மாயில் கடந்த மாதம் கூறியிருந்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.