NATIONAL

இத்தாலியில் சிக்கிக் கொண்ட மலேசியருக்கு உதவும்படி பிரதமர் உத்தரவு

2 ஜூலை 2025, 12:53 PM
இத்தாலியில் சிக்கிக் கொண்ட மலேசியருக்கு உதவும்படி பிரதமர் உத்தரவு

கோலாலம்பூர், ஜூலை 2 - கடப்பிதழ் களவுபோனதால்  இத்தாலியின் மிலானில் சிக்கித் தவிக்கும் மலேசியரான டலிலா ஜைடிக்கு ரோமில் உள்ள மலேசிய தூதரகம் உடனடியாக  உதவ வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பணித்துள்ளார்.

இவ்விவகாரம் விஸ்மா புத்ராவின் கவனத்திற்குக் கொண்டுச் செல்லபட்டுள்ளதாக அன்வார் கூறினார்.

தனது கடப்பிதழைப் பறிகொடுத்த பிறகு உதவி கோரி டலிலா எக்ஸ் தளத்தில்  வெளியிட்ட  பதிவிற்கு அன்வார் பதிலளித்தார்.

வணக்கம் பி.எம்.எக்ஸ் @’anwaribrahim, என் பெயர் டலிலா ஜைடி. நான் ஒரு மலேசியர்.  2025 ஜூன் 30ஆம் தேதி மதியம் சாண்டா சோபியா ரயில் நிலையம் அருகே எனது  கடப்பிதழ் களவுபோனதால்  நான் தற்போது மிலானில் சிக்கித் தவிக்கிறேன். இதில் உங்கள் கவனத்தை நான் உண்மையிலேயே எதிர்பார்க்கிறேன் என்று அவர் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ரோமில் உள்ள மலேசிய தூதரகத்திலிருந்து அவசர பயண ஆவணத்தைப் பெற முயறன்றதாகவும் எனினும்,  தேவையான ஆவணங்களில் கையெழுத்திடுவதற்கு அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி இல்லாததால் அதைச் செய்ய முடியவில்லை என்றும் டலிலா தனது பதிவில் கூறியுள்ளார்.

இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் அழைப்பின் பேரில் அந்நாட்டிற்கு  பணி நிமித்தப் பயணம் மேற்கொண்டுள்ள  அன்வார் நாளை வரை  இத்தாலியில் இருப்பார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.