NATIONAL

பினாங்கு மற்றும் கெடாவில் புயல்

30 ஜூன் 2025, 1:51 PM
பினாங்கு மற்றும் கெடாவில் புயல்

ஜோர்ஜ்டவுன், ஜூன் 30 - நேற்று பினாங்கு மற்றும் கெடாவில் உள்ள பல பகுதிகளை தாக்கிய புயல் காற்று, வீடுகளுக்குச் சேதத்தை ஏற்படுத்தியதோடு மரங்களையும் வேரோடும் சாய்த்தது.

நேற்று அதிகாலை 4 மணிக்கு மலாக்கா நீரிணையிலிருந்து புயல் தொடங்கி பினாங்கு தீவின் மேற்குப் பகுதியில் உள்ள பாலிக் பூலாவை மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் தாக்கியதை, செயற்கைக்கோள் படங்களுடன் கூடிய வானிலை செயலிகள் காட்டுகின்றன.

இந்த திடீர் புயல் காரணமாக குளுகோரின் தாமான் துன் சார்டோனில் உள்ள ஓர் அடுக்குமாடி கட்டிடத்தின் கூரை, அதிகாலை 4.30 மணியளவில் 7 கார்கள் மீது சரிந்து விழுந்ததாக, MBPP எனப்படும் பினாங்கு மாநகர மேயர் டத்தோ ஏ.ராஜேந்திரன் கூறினார்.

MBPP Skuad Pantas பணிப்படை, அந்தப் பகுதியை பாதுகாப்பாகவும் போக்குவரத்துக்கு ஏற்றதாகவும் இருப்பதை உறுதிச் செய்யும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டதாக ராஜேந்திரன் மேலும் கூறினார்.

லெங்கொக் பாவாக், திங்காட் பீசி, ஜாலான் குட்வாரா, பாயா கொங்சி ,லொபோ தாய் Jalan பத்து மவொங் பகுதிகளில் புயல் காற்றில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. எனினும் இச்சம்பவத்தால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றார் அவர்.

இவ்வேளையில் புயல் நேற்று அதிகாலை கெடாவில் குறிப்பாக கூலிம் மற்றும் சுங்கை பட்டாணியில் பல இடங்களில் சேதத்தை ஏற்படுத்தியது.

இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட

சாலைகளில் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால், வியாபாரிகள் சிலரது கூடாரங்கள் சேதமடைந்தன. ஆனால், யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.