NATIONAL

எஸ்.எஸ்.எடி. மறுசீரமைப்பில் வெள்ளை சீனிக்கு வரி இல்லை

20 ஜூன் 2025, 3:15 PM
எஸ்.எஸ்.எடி. மறுசீரமைப்பில் வெள்ளை சீனிக்கு வரி இல்லை

கோலாலம்பூர், ஜூன் 20 - எதிர்வரும் ஜூலை மாதம் 1ஆம் தேதி  முதல் அமலுக்கு வரவிருக்கும் மறுசீரமைக்கப்பட்ட விற்பனை மற்றும் சேவை வரியின் (எஸ்.எஸ்.டி.)  கீழ் சுத்திகரிக்கப்பட்ட அல்லது வெள்ளை சீனிக்கு  வரி விலக்கு அளிக்கப்படும் என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

சுத்திகரிக்கப்பட்ட தூள்  சீனியின்  உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மூல சர்க்கரை ஐந்து சதவீத விற்பனை வரிக்கு உட்பட்டதாக இருக்கும் என்று அமைச்சு இன்று வெளியிட்ட  அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இருப்பினும், முன்னர் அறிவிக்கப்பட்டபடி எம் எஸ்.எம்.  மலேசியா ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் போன்ற சீனி உற்பத்தியாளர்கள் மற்றும் சுத்திகரிப்பு நிறுவனங்கள் தங்கள் மூலப்பொருட்கள் மற்றும் உள்ளீடுகளுக்கு வரி விலக்கு பெற விண்ணப்பிக்க தகுதியுடையவை.

குறிப்பாக எம். எஸ். எம். போன்ற சீனி சுத்திகரிப்பு நிறுவனங்கள் விநியோகம் மற்றும் விலை நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக அரசாங்கத்திடமிருந்து மாதாந்திர ஊக்கத்தொகையை பெறுவதால் சுத்திகரிக்கப்பட்ட சீனியின் விலையில் அதிகரிப்பு ஏற்படுவதற்கு  எந்த காரணமும் இல்லை. என்று அமைச்சு குறிப்பிட்டது.

விற்பனை வரி மறுமதிப்பீடு  மூலம் எம்.எஸ்.எம். சர்க்கரை மீதான தாக்கம் குறித் அறிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சு இந்த அறிக்கையை வெளியிட்டது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.