செய்தி. ஆர்.ராஜா
ஷா ஆலம், ஜூன் 6- மெட்ரிகுலேஷன் விண்ணப்பங்கள் கல்விக்கான நிராகரிக்கப்பட்டு மேல்முறையீடு செய்ய விரும்பும் மாணவர்களுக்கு உதவ கோத்தா கெமுனிங் தொகுதி முன்வந்துள்ளது.
2025/2026 தவணைக்கு மெட்ரிகுலேஷன் கல்லூரிகளில் அசல் விண்ணப்பம் செய்த மாணவர்கள், விண்ணப்பம் வெற்றியடையாத மாணவர்கள், இந்த முடிவை எதிர்த்து மேல் முறையீடு செய்ய விரும்பும் மாணவர்களுக்கு உதவ தாங்கள் தயாராக உள்ளதாக
கோத்தா கெமுனிங் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பிரகாஷ் கூறினார்.
கோத்தா கெமுனிங் தொகுதியில் உள்ள மாணவர்களுக்காக இந்த உதவித் திட்டம் முன்னெடுக்கப்படுவதாகக் கூறிய அவர், சம்பந்தப்பட்ட மாணவர்கள்
https://forms.gle/SA8TseRawik66ioP6 என்ற இணைப்பில் தங்கள் விபரங்களைப் பூர்த்தி செய்யும்படி கேட்டுக் கொண்டார்.
மெட்ரிகுலேஷன் கல்வி மேல் முறையீடு தொடர்பில் கூடுதல் விபரங்களைப் பெற விரும்பும் மாணவர்கள் +6011 1257 5460 என்ற எண்களில் தொகுதி சேவை மையத்தை தொடர்பு கொள்ளும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
கோத்தா கெமுனிங் தொகுதியில் உள்ள மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவும் கடப்பாடு எங்களுக்கு உள்ளது. மாணவர்களின் மேல்முறையீட்டை கூடிய விரைவில் சம்பந்தப்பட்ட தரப்பினரின் கவனத்திற்கு கொண்டுச் செல்ல நாங்கள் முயற்சி மேற்கொள்வோம் என அவர் தனது முகநூலில் வெளியிட்ட ஒரு பதிவில் கூறினார்.








