NATIONAL

வலுவான ஒத்துழைப்பு, முதலீடு குறித்து அன்வார்- குவைத் இளவரசர் பேச்சு

27 மே 2025, 2:43 AM
வலுவான ஒத்துழைப்பு, முதலீடு குறித்து அன்வார்- குவைத் இளவரசர் பேச்சு

கோலாலம்பூர், மே 27- தலைநகரில் நடைபெறும்  46வது ஆசியான் உச்சநிலை மாநாட்டின் போது​​பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்  குவைத் பட்டத்து இளவரசர் ஷேக் சபா காலிட் அல்-ஹமாட் அல்-சபாவுடன்  20 நிமிட நேர சந்திப்பை நடத்தினார்.

மலேசியாவிற்கும் குவைத்துக்கும் இடையே வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, கல்வி, சுற்றுலா மற்றும் பேரிடர் மேலாண்மை ஆகிய துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் முயற்சிகளை இந்த சந்திப்பு மையமாகக் கொண்டிருந்தது.

பாலஸ்தீனம், சிரியா, லெபனான் மற்றும் ஏமன் உள்ளிட்ட பிராந்தியத்தின் தற்போதைய நிலவரங்கள் குறித்தும் இரு தலைவர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

முன்னதாக, மலேசியாவிற்கும் வளைகுடா ஒத்துழைப்பு மன்றத்திற்கும் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கான ஆவணப் பரிமாற்ற நிகழ்வில் பிரதமர் அன்வாரும் ஷேக் சபா காலிட்டும் கலந்து கொண்டனர்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.