NATIONAL

எஸ்.சிவசங்கரி உலக ஸ்குவாஷ் போட்டியின் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்

15 மே 2025, 4:00 AM
எஸ்.சிவசங்கரி உலக ஸ்குவாஷ் போட்டியின் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்

அமெரிக்கா, மே 15 - அமெரிக்கா, சிக்காங்கோவில் உலக ஸ்குவாஷ் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் மூன்றாவது சுற்றில் உபசரணை நாட்டின் அமான்டா ஷோபியைத் தோற்கடித்து, தேசிய ஸ்குவாஷ் வீராங்கனை எஸ்.சிவசங்கரி காலிறுதிக்கு முன்னேறினார்.

சிக்காங்கோ பல்கலைக்கழக கிளப்பில் நடைபெற்ற இவ்வாட்டத்தை 3-0,11-8, 14-12,11-6 என்ற புள்ளிகளில் சிவசங்கரி கைப்பற்றினார். இந்த ஆட்டம் 34 நிமிடங்கள் வரை மட்டுமே நீடித்தது குறிப்பிடத்தக்கது.

காலிறுதி ஆட்டத்தில் நான்காம் நிலை வீராங்கனை ஒலிவியா வியெவருடன் சிவசங்கரி மோதவுள்ளார்.

ஆடவருக்கான பிரிவில், நாட்டின் ங் யென் யோவ் தோல்வி கண்டு விட்டு விலகிய நிலையில் உலக தரவரிசையில் ஒன்பதாவது இடத்தில் உள்ள சிவசங்கரி, இப்போட்டியில் நிலைத்திருக்கும் மலேசியாவின் ஒரே பிரதிநிதியாவார்.

பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.