NATIONAL

சிறார் பராமரிப்பு மையங்களை பதிவு செய்ய 5,000 ரிங்கிட் உதவி

29 ஏப்ரல் 2025, 4:00 AM
சிறார் பராமரிப்பு மையங்களை பதிவு செய்ய 5,000 ரிங்கிட் உதவி

ஷா அலாம், ஏப் 28 - சிலாங்கூரில் 100க்கும் மேற்பட்ட சிறார்கள் பராமரிப்பு மையங்கள் பதிவு இல்லாமலேயே செயல்பட்டு வருவதாக மகளிர் மேம்பாடு மற்றும் சமூகநலத்துறைக்கான சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் அன்பால் சாரி தெரிவித்தார்.

இதனால், சிறார் பராமரிப்பு மையங்களை பதிவு செய்வதற்கு அதிகபட்சம் 5,000 ரிங்கிட் உதவியை சிலாங்கூர் அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.

5,000 ரிங்கிட் மானியம் பெற தகுதியுள்ள குழந்தை பராமரிப்பு மையங்களைத் தேர்ந்தெடுப்பதற்காகக் கடந்த வாரம் பராமரிப்பு மைய மானியம் தொழில்நுட்ப மற்றும் மதிப்பீட்டுக் குழு கூட்டம் நடைபெற்றதோடு, இதில் RM400,000 நிதி ஒதுக்கப்பட்டது

இருப்பினும், திட்டமிடல் அனுமதி மற்றும் கட்டிட பாதுகாப்புக்கான விண்ணப்பங்கள் ஊராட்சி மன்றங்களால் மதிப்பிடப்படும்.

சிறார் பராமரிப்பு இடத்திற்கான அனுமதி நிராகரிக்கப்பட்டால், அவர்கள் வேறு இடத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் அல்லது இதர இடங்களை பரிந்துரைக்க வேண்டும் என சிலாங்கூர் பராமரிப்பு நல 2025 (XCare) திட்டத்தைத் தொடக்கிவைத்த பின் செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

பகல்நேர சிறார் பராமரிப்பு மையங்கள் கவனம் செலுத்த வேண்டிய கட்டாய அம்சங்களில் அனைத்து பராமரிப்பாளர்களும் பயிற்சி வகுப்புகளை மேற்கொள்வதும், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, மாநில சுகாதாரத் துறை, உள்ளூர் அதிகாரிகள் மற்றும் ஜே.கே.எம் போன்ற நிறுவனங்களால் நிர்ணயிக்கப்பட்ட தொழில்நுட்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வதும் அடங்கும் என்று அன்பால் சாரி தெரிவித்தார்

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.