NATIONAL

போப் பிரான்சிஸ் பக்கவாதத்தால் மரணம்

23 ஏப்ரல் 2025, 5:07 AM
போப் பிரான்சிஸ் பக்கவாதத்தால் மரணம்

ரோம், ஏப்ரல் 23 - கடந்த திங்கட்கிழமை போப் பிரான்சிஸ் பக்கவாதத்தால் உயிரிழந்ததாக வத்திகன் தெரிவித்திருக்கிறது.

அன்று அதிகாலை அவர் திடீர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதாக வத்திகனைச் சேர்ந்த மருத்துவர் ஏண்ட்ரியா எர்சங்கெலி கூறியிருக்கிறார்.

பின்னர், இருதயம் செயலிழந்து, அவர் நினைவற்ற நிலைக்குச் சென்றதாகவும் மருத்துவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மையில் கடுமையான நிமோனியா நோய்த்தொற்று காரணமாகப் போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு, மருத்துவமனையிலிருந்து வீடுத் திரும்பிய அவர் மரமடைந்துள்ளார்.

போப் பிரான்சிஸ்சின் மறைவுக்கு உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். உலகம் முழுக்க பிரார்த்தனைக் கூட்டங்கள் நடைபெறுகின்றன.

இறுதிச் சடங்கிற்கான தேதி எதுவும் இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை.

--பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.